தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சென்னை விமான நிலைய ஓடுதளம் தற்காலிகமாக மூடப்பட்டது

வர்தா புயலால் பித்த மழையால் சென்னை விமான நிலைய ஓடுதளத்தில்  தண்ணீர் தேங்காமல் இருக்க ஓடுதளம் மூடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.ஏற்கனவே 5 விமானங்கள்  ரத்து செய்யப்பட்டது மட்டுமின்றி 25 விமானங்கள் வேறு நகரங்களுக்கு மாற்றியமைக்க பட்டதும் குறிப்பிடத்தக்கது.இது போல சென்னை புறநகர் ரயில் சேவையும் தடைபட்டுள்ளது .அது மட்டுமின்றி சென்னையின் பல இடங்களில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மாநிலத்தின் பிற பகுதிகளுடன்  இருந்த சென்னையின் தொடர்பு தடைப்பட்டுள்ளது.இந்நிலையில் 1994க்கு பிறகு மணிக்கு 80 கி.மீ காற்று சென்னையில் வீசி வருவதாகவும் இது மேலும் அதிகரித்து 100 கி.மீ மற்றும் அதற்கு மேலான வேகத்தை இன்னும் சில நேரத்தில் எட்டக்கூடும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மேலும் அவர் மழை குறித்த தகவல்களை உடனுக்குடன் இன்று காலை முதல் பதிவேற்றம் செய்து வருகிறார்.பெரும்பாலும் அவர் கூறும் தகவல்கள் யாவும் சரியாகவே உள்ளன அவர் வழங்கிய தகவல்களை ஒப்புக்கொள்வது போலவே சில மணி நேரங்களில்   சென்னை வானிலை  ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வழங்கிவரும் தகவல்களும்  அமைந்திருக்கின்றன .

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...