தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் 2017 புத்தாண்டு கொண்டாட்டங்கள்

நாளை புதிய ஆண்டு இனிதே பிறக்க உள்ள நிலையில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்,மால்கள்,தொழில்நுட்ப பூங்காக்கள் என பிரபலமான தனியார் நிறுவனங்கள் பலவற்றிலும் பிறக்க இருக்கும் 2017ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன.

அடச்சே...அது என்ன புத்தாண்டு கொண்டாட்டம்? இப்படி மது அருந்தி நடனமாடி தான் புத்தாண்டை கொண்டாட வேண்டுமா ?என்று ஒரு சிலர் தொடர்ந்து கேள்விகளை  எழுப்பி வந்தாலும் கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாரும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை . காலை முதல் பணமெடுக்க வங்கிகளின் வாசலில் நின்ற கூட்டத்தை விட இருமடங்கு கூட்டம் புத்தாண்டு கொண்டாட்ட முன் பதிவிற்கு வரிசைகட்டி நிற்கிறது.மது இன்றி வீண் பிரச்சனைகள் இன்றி குடும்பத்துடன் புத்தாண்டை பொது இடத்தில் அமைதியாக நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்த படி கொண்டாட முடியுமா ? என்ற கேள்வியுடன்  சிலர் புத்தாண்டை கொண்டாடுவதே கிடையாது இன்னும் சிலர் தொலைக்காட்சி முன்னரே தங்கள் கொண்டாட்டத்தை முடித்துக் கொல்கின்றனர்.

நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து வித்தியாசமானது தான் புதுச்சேரி மாநிலம் இதை மீண்டும் பறைசாற்றும் வகையில் காரைக்காலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடற்கரையில் இன்று இரவு 8 மணி முதல் 12 மணி வரை புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 இந்த கொண்டாட்டத்தில் சென்னை லோகு இன்னிசை குழுவின் கச்சேரி நடைபெறும்  எனவும் மேலும் நடனம் ,நகைச்சுவை ,வண்ண ஒளி காட்சி ,வாண வேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதால் காரைக்கால் பொது மக்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு புத்தாண்டை கொண்டாடுமாறு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ள பட்டுருப்பதாக செய்தி.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...