தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் சுனாமி நினைவு அஞ்சலி

26-12-2016 இன்று சுனாமி நினைவு நாள்.தமிழக கடலோர மாவட்ட மக்களை பொறுத்த வரையில் நினைவு படுத்த அவசியம் இல்லாத நாள்.காலை மாலை என பொழுதுபோக்க கடற்கரை முன் கூடிய மக்களை பேர் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நாள். கொத்துக்கொத்தாய் மனித உடல்களை குழி தோண்டி புதைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திய நாள்.இயற்கையின் முன் மனதனின் அறிவியல் அறிவு பயனற்று போன நாள். சுனாமியில் இறந்து போன மக்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இயற்கையின் சக்தியின் முன் நமது வலிமை ஒன்றும் இல்லை என்பதை உணர்த்தவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை நினைவு படுத்துவது அவசியமாகி விடுகிறது.

2004 ஆம் ஆண்டு வங்கக்கடலில் ஏற்பட்ட சுனாமியால் அரங்கேறிய அவலங்களை நினைவு கூறும் வகையில் இன்று 26-12-2016 அன்று 12வது ஆண்டு சுனாமி நினைவு அஞ்சலி காரைக்காலில் அனுசரிக்கப்பட்டது.காரைக்கால் கடற்கரையில் அமைந்து இருக்கும் சுனாமி நினைவு தூண் அருகே மௌன ஊர்வலம் நடைபெற்றது அதில் பல்வேறு தரப்பு மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு இந்த நாளை நினைவு கூர்ந்தனர்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...