தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

100% பணமில்லா பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு

₹500 மற்றும் 1000 திரும்பப் பெறுவதாக மத்திய அரசு நவம்பர் 8ஆம் தேதி அறிவித்ததிலிருந்தே பல எதிர்ப்புகள்.அன்று முதல் இன்று வரை எதிர்ப்போர் கூறும் விஷயம் ஒன்று தான் பொது மக்களின் பாதிப்பு ஆனால் மத்திய அரசு பதில் கூறுகையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை இதன் முக்கியத்துவம் குறித்து முன் வைக்கிறது முதலில் கள்ள நோட்டுக்களை அப்புறப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டது அப்பொழுதே பல பொருளாதார நிபுணர்கள் மொத்த பணத்தில் கள்ள நோட்டின் அளவு எவ்வளவு என்ற ஆய்வில் ஈடுபட்டு ஏற்கனவே வெளியிடப் பட்டு இருந்த ஒரு ஆய்வறிக்கையின் தகவல்களை முன் வைத்தனர் அதன் அடிப்படையில் புழக்கத்தில் இருக்கும் மொத்த பணத்துடன் ஒப்பிடுகையில் கள்ளப் பணத்தின் அளவு மிகவும் குறைவு அதற்காக ₹500 மற்றும் 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது தேவையற்றது எனவும் கூறினர் உடனே மத்திய அரசு காரணத்தை மாற்றிக்கொண்டு கருப்பு பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை தேவைப் படுகிறது என்றது அதுவும் சாத்தியமில்லை முக்கால் வாசி கருப்பு பணங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டு விட்டன.அவை வெளி நாடு முதலீடாக இந்தியாவுக்கு திரும்ப நல்ல பணமாக வரும் என்ற வாதத்தை முன் வைத்தனர் அதுமட்டும் அல்லாமல் வெறும் ₹1000,5000,10,000 த்துக்கு மக்கள் நாள் முழுவதும் வங்கிகளில் வாசலில் காத்திருக்க ஒரு சிலர் கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளிடம் இருந்து கோடிக்கணக்கில் மாற்றி கட்டுக்கட்டாக வரிசையாக சேமித்து வைத்திருப்பது பிடிப்பட்டது என்று  ஊடகங்களில் காட்டப்படுவதை மக்களே பார்க்கின்றனர் .தோராயமாக 100 திருடர்களில் ஒருவன் தான் மாட்டிக்கொள்வான் அப்படிப் பார்த்தல் பிடிபட்டதே இவ்வளவு என்றால் பதுக்கி வைத்திருப்பது எவ்வளவு இருக்கும் ? இதில் விமானத்தில் கொண்டுவரப்பட்ட புதிய 500 ருபாய் நோட்டுக்கள் எங்கே சென்றன என்பது இன்னும் மாயமாகவே உள்ளது.வங்கி வாசாலில் காத்திருக்கும் மக்கள் ரூபாய் நோட்டுக்கள் தட்டுப்பட்டால் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்த உடனே இப்பொழுது புதியதொரு காரணத்தை மத்திய அரசு முன் வைக்கிறது அதுதான் பணமில்லா பரிவர்த்தனை.

வெளிநாடுகளை போன்று இங்கேயும் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கப்படுத்த தான் இதைப்போன்ற நடவடிக்கை என்கிறது மத்திய அரசு.வளர்ந்த நாடுகளில் கூட 100% பணமில்லா பரிவர்த்தனை கட்டாயமாக்க படவில்லை.ஆனால் மத்திய அரசின் சமீப கால நடவடிக்கைகள்  மக்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்களை கட்டாயப்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது.தான் உழைத்து சம்பாரித்த பணத்தை எடுத்து செலவு செய்ய மக்களால் முடியவில்லை என்பது மிகவும் கொடுமையான விஷயம்.சர்வாதிகார ஆட்சிகள் நடைபெறும் நாடுகளில் கூட இதைப்போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டது கிடையாது.இந்த 100% பணமில்லா பரிவர்த்தனை என்கிற பெயரில் பணம் படைத்த தொழிலதிபர்களுக்கு அரசு எந்த அளவு உதவ இருக்கிறது என்பது போக போகத்தான் தெரியும்.இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 100% பணமில்லா பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் மேலும் மக்கள் அனைவரும் இதனை எதிர்த்து போராட தயாராகி விட்டதாக கூறியிருக்கிறார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...