தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சசிகலாவின் ஆதரவாளரா மோடி ?

முன்னாள் தமிழக முதல்வர் அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு மோடியின் சமீபகால நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது அவர் சசிகலாவுக்கு ஆதரவாக செயல் படுகிறாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது.ஆம் நேற்று தலைமை செயலர் வீட்டில் நடந்த ரெய்டு கூட அதை உறுதி படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளது.சேகர் ரெட்டி என்பவர்,முன்னாள் முதல்வர் அவருடைய தோழி மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் என கட்சியின் பல முக்கிய தலைகளுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று அவர் வீட்டில் ரெய்டு நடந்த முதல் நாள் அணைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியிடப்பட்டது .அதன் பிறகு தற்போதைய தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் பெயர் மட்டும் அதில் மிகைப்படுத்தப் பட்டது அப்பொழுது அவர் மோடி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார் பின்னர் சசிகலாவுக்கு மிகவும் நெருங்கியவர் என்று ஊடகங்களில் செய்தி கசிந்தது.சேகர் ரெட்டி என்பவர் மூன்று நபர்களுக்கும் நெருக்கமானவர் என்பதில் எந்த சந்தேகமும் ஊடகங்களுக்கு இல்லை ஆனால் ஒவ்வொரு நாளும் இவருக்கு நெருக்கமானவர் அவர் என்று ஒவ்வொரு பெயரை கூறுகிறார்களே அதில் தான் நிறைய குழப்பங்கள். இந்நிலையில் முதல்வர் பன்னீர் செல்வத்தின் பெயர் நேற்றிலிருந்து மீண்டும் சேகர் ரெட்டியுடன் அதிகமாக தொடர்புப் படுத்தி பேசப்பட்டு வருகிறது.

இவைகள் எல்லாம்  ஒரு பக்கம் இருக்க நேற்று தலைமை செயலாளர் வீட்டில் நடந்த ரெய்டு மூலம் யாருக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டு உள்ளார்கள்?.முன்னாள் முதல்வரின் மறைவுக்கு பிறகு நேற்று முன் தினம் வரை தீபா என்ற அவருடைய இரத்த உறவை ஊடகங்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடின ஆனால் இன்று தீபக் என்ற ஒருவர் எண்டரி கொடுக்கிறார்.இந்த தீபக் இது நாள் வரையில் ஏன் ஊடகங்களில் தோன்றவில்லை ? இதைப்போன்ற இன்னும் பல கேள்விகளுக்குமான  பதில் இன்னும் சில தினங்களில் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடந்து முடிந்த பிறகு தெரிந்துவிடும்.எது எப்படியானாலும் இன்றைய சூழலில் மோடியின் தேவை ஒரு சரியான அடிமை மட்டுமே.இரட்டை இலைக்கு நடுவே தாமரை மலருமா என்று கூடிய விரைவில் தெரிந்து விடும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...