தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி அரசு : அரசு ஊழியர்கள் பணம் எடுக்க வங்கிகளுக்கு நேரடியாக செல்வதை குறைக்க அறிவுறுத்தல்

மாதத்தின் முதல் வாரத்தில் வங்கிகளில் ஏற்படும் நெருக்கடிகளை குறைக்க அரசு ஊழியர்கள் டெபிட் /கிரெடிட் கார்டு மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்தி  பணப் பரிவர்தனைகளில் ஈடுபடும்மாறு புதுச்சேரி அரசு தமது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவுறித்தியுள்ளது.புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் அரசு செயலர் சுந்தரவடிவேலு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் ரூபாய் 500 மற்றும் 1000 செல்லாது என்ற அறிவிப்பால் சமூகத்தில் மட்டுமல்லாமல் வங்கிகளிலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.அரசு எடுத்துவரும் தொடர் நடவடிக்கைகளால் கூடிய விரைவில் இந்த நிலைமை சரி செய்யப்பட்டு விடும் அவ்வாறு நிலைமை சகஜ நிலை அடையும்வரை அரசு ஊழியர்கள் வங்கிகளுக்கு நேரடியாக சென்று பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதை முடிந்த வரையில் குறைத்துக்கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டெபிட் /கிரெடிட் கார்டினை பயன்படுத்த அறிவுறித்தியுள்ளது.மேலும்,மொபைல் போன்களில் பணப் பரிவர்த்தனைக்கான முக்கிய செயலிகளை தரவிறக்கம் செய்து அதனை பயன் படுத்துமாறும் அறிவுரைகளை வழங்கியுள்ளது.
 






பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...