சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக அப்போல்லோ மருத்துவமனையில் தீவர சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் மாலை 5.25க்கு பிரிந்ததாக சற்றுமுன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அணைத்து முக்கிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் இது அதிகாரபூர்வ தகவல் இல்லையென்றும் இது வெறும் வதந்தி என்றும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்போலோ அடுத்த அறிக்கையை வெளியிட்டு இருப்பதாகவும் சில இணையதளங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன.இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்த கொடி மீண்டும் சரி செய்யப் பட்டுள்ளது.எது உண்மை என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
0 comments:
கருத்துரையிடுக