தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

28-01-2017 தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்

28-01-2017 தமிழகத்தில் கோயம்புத்தூர்,கோவில்பட்டி ,கும்பகோணம்,ஜெயம்கொண்டம் , திருச்சி,தஞ்சாவூர்,சின்னாளம்பட்டி (திண்டுக்கல்),தாராபுரம் ,பழனி ,பரங்கிப்பேட்டை,கோவில்பட்டி,விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் பொதுவாக சொல்லப்போனால் நாளை கடலோர மாவட்டங்களை காட்டிலும் உள் மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

28-01-2017 காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் இன்று 27-01-2017 அன்று  நிலவிய வானிலையை போலவே நாளையும் இருக்கலாம்.மழையின் அளவு சற்று குறைய வாய்ப்புகள் உள்ளது.

28-01-2017 நாகப்பட்டினம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மழைக்கான வாய்ப்பு உண்டு திருத்துரைப்பூண்டி,முத்துப்பேட்டை பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

2017ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தில் காரைக்கால் மாவட்டத்தில்  27-01-2017 காலை வரையில் 146.8 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது தமிழகத்தின் பிற  மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இதுவே அதிகம் இதைப்போன்று இந்த பட்டியலில் இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் 111.6மி.மீ அளவு மழையுடன் நாகபட்டினம் மாவட்டம் உள்ளது மூன்றாவது இடத்தில் 101.8 மி.மீ அளவுடன் திருவாரூர் உள்ளது.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...