தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

PETAவை தடை செய்வதால் என்ன பயன் ?

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் ஓய்ந்தாலும் புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கு எதிராக  நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்த அமெரிக்காவை தலைமை யிடமாக கொண்டு இயங்கும் விலங்குகள் நல தன்னார்வு தொண்டு நிறுவனமான  PETAவை தமிழகத்தில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு பயணிக்கிறது.அது  சரி அந்த PETAவை தடை செய்வதால் மக்களுக்கு என்ன பயன் இருக்க முடியும் ? எனக்கு தெரிந்த வரையில் PETAவுக்கு தடை விதிப்பதால் எந்த பயணம் கிடையாது.நான் முன்பே சொன்னது போல அது வெளி நாட்டு தன்னார்வு தொண்டு நிறுவனம் அவைகளால் வேறு ஒரு பெயரில் மீண்டும் நமது நாட்டில் நுழைந்து விட முடியும்.வேண்டுமானால் இந்த தடையின் மூலம் இந்திய கலாச்சாரத்தில் தலையிடும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்த நினைக்கலாம் ஆனால் அதெற்க்கெல்லாம் பயப்படும் அளவிற்கு அவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல அதிகம் பணம் படைத்தவர்கள்.பணம் இருந்தால் போதும் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் வளைக்க முடியும் என்கின்ற நிலை உடைய ஒரு தேசத்தில் அவர்களால் எப்படியும் ஊடுருவ முடியும் ஊடுருவ கூட அவசியமில்லை நேரடியாகவே திரும்ப வருவார்கள்.

அது மட்டுமல்ல  என் நாட்டிலே என் கலாச்சாரத்தை நான் பின்பற்ற ஒரு வெளிநாட்டு அமைப்பை தடை செய்தே ஆக வேண்டும் என்றால் அது அவர்களின் மீது உள்ள தவறா ? இல்லை இந்த விவகாரத்தில் நம் நாட்டின் சட்டம் தான் பலவீனமாக உள்ளதா ? கொஞ்சம் எண்ணிப்பாருங்கள் தோழர்களே.

சரி இதற்கு என்ன தான் தீர்வு ? PETA போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நம் நாட்டின் சடங்குகளிலும் மக்களின் கலாச்சாரம் சார்ந்த விஷயங்களிலும்  தலையிடும் அதிகாரம் பறிக்க பட வேண்டும்.அதற்கு மத்திய அரசு சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.இது நடந்தால் மட்டுமே இதை போன்ற பிரச்சனைகளுக்கு எல்லாம் சரியான தீர்வு கிடைக்கும்.

PETA என்ற ஒரு அமைப்பு இந்தியாவில் இருக்க வேண்டும் ஆனால் நம் நாடு விலங்குகளுக்கு எதிராக அவர்களால் செயல்பட முடியாமல் இருக்க வேண்டும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...