தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

திரையரங்குகளில் தேசியகீதம் :தொடரும் கலவரங்கள்

திரையரங்குகளில் திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது ஆனால் இந்த உத்தரவினால் கேரள மாநிலத்தில் உள்ள சில திரையரங்குகளில் தொடர்ந்து படம் பார்க்க வருவோரிடம் தள்ளு முள்ளு ஏற்பட்டு வருகிறதாம்.சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள திரையரங்கு ஒன்றில் தேசியகீதம் இசைக்கப்பட்ட பொழுது கைக்குழந்தையுடன் இருந்த ஒரு பெண்மணி எழுந்து நிற்கவில்லையாம் அதனை காரணமாக வைத்துக்கொண்டு அந்த பெண்மணியையும் அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்தனாராம் சிலர் பின்னர் திரைப்படம் முடிந்த வெளியே வரும்பொழுது ஒரு கும்பல் அந்த குடும்பத்தை சுற்றி வளைத்து பிரச்சனையில் ஈடுபட்டதாம் ஒரு கலவரமாகவே மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த நிகழ்வு பொதுமக்களின் தலையீட்டால் பிரச்சனைகள் ஏதும் இன்றி முடிந்ததாம்.அந்த குடும்பத்தை சுற்றி வளைத்து போலீசாரிடம் ஒப்படைத்த பொழுது அந்த கும்பலை சேர்ந்த அனைவரும் ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததாம் இது ஒரே ஒரு பிரச்னை என்றால் சாதாரணமாக விட்டுவிடலாம் தொடர்ந்து இதைப்போன்ற பிரச்சனைகள் அரங்கேறி வருவதால் கேரள திரையரங்கு உரிமையாளர்கள் என்ன செய்வதென்று அறியாமல் குழம்பிபோயிருக்கின்றனர்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...