தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

திருக்கடையூர் குதிரை பந்தயம்

காரைக்காலில் இருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது  என்பதை நாம் ஏற்கனவே இதற்கு முந்தைய பதிவுகளில் விவாதித்திருந்தோம்.குறிப்பாக  மயிலாடுதுறை, காரைக்கால் ,சீர்காழி ஆகிய  மூன்று நகரங்களையும் இணைக்கும் மைய பகுதியான ஆக்கூர் முக்கூட்டிக்கு பிறகு சாலை மிகவும் குறுகலாக இருக்கும்.அந்த சாலையின் மகத்துவத்தை அடிக்கடி அந்த வழியாக பயணம் செய்யும் ஓட்டுனர்களை கேட்டால் புட்டுப்புட்டு வைப்பார்கள். ஆனால் அந்த சாலையிலேயே ஆக்கூரில் இருந்து சில தூரம் வரை சாலை  பெரிதாகவும் பள்ளங்கள் எதுவும் இன்றி அழகாகவும் காணப்படும்.அது என் அந்த குறிப்பிட்ட சில தூரம் வரை மட்டும் சாலை  இருக்கிறது என்று அவ்வழியாக பயணங்கள் மேற்கொள்ளும் பொழுதெல்லாம் தோன்றும்.அவ்வாறு ஒரு முறை தோன்றியபொழுது ஆர்வம் அதிகமாகி வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் நடந்து வந்த ஒரு முதியவரிடம் "தாத்தா, இந்த சாலை மட்டும் ஏன் புதியதாக காட்சி அளிக்கிறது ? "என்று கேட்டேன் உடனே அந்த முதியவர் அவரது இளமை பருவ நினைவுகளிலிருந்து ஒரு 37 ஆண்டு  கால கதையை கூற ஆரம்பித்தார்.

அந்த கதை முழுவதையும் கூற இந்த ஒரு பதிவு போதாது.சரிப்பா அந்த சாலை ஏன் அகலமாக உள்ளது ? அதை முதலில் கூறு என்ககிறீர்களா இதோ கூறுகிறேன் அந்த முதியவர் கூறிய பதிலின் படி அந்த சாலை அகலமாகவும் அழகாகவும் இருக்க காரணம் ஆண்டு தோறும் அங்கு நடைபெற்று வரும் குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயங்கள் தானாம்.2015க்கு முன்பிலிருந்து 37 ஆண்டுகளாக காணும் பொங்கல் தினத்தில் தவறாமல் குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயம் அந்த பகுதியில் நடைபெற்று வந்ததாம் ஆனால் கடந்த 2015 இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையொட்டி கடந்த ஆண்டு இந்த பந்தயங்கள் நடைபெற வில்லையாம்.என்னடா வெறும் பந்தயம் தானா என்று முகம் சுழிக்காதீர் இந்த தலைமுறை மறந்து போன விஷயங்களில் இதுவும் ஒன்று.அந்த முதியவர் கூறிய குதிரை மற்றும் மாட்டு வண்டி பந்தயக் கதைகளை அடிப்படையாக கொண்டு காதல்,பாசம்,வீரம் என நவரசம் கலந்த ஒரு திரைப்படத்தையே உருவாக்கலாம் அப்படி ஒரு உண்மைக்  கதை அது.இந்த பந்தயங்களுக்கு தடை விதித்ததை பற்றி அங்கு இருக்கும் மக்களிடம் கேட்டால் அவர்கள் கூறும்  சிந்திக்க வைக்கிறது.மக்களிடம் கலாச்சாரத்தையும் பண்பையும் வளர்க்கும் கிராமப்புற பந்தயங்களுக்கும் விளையாட்டுக்களுக்கும் தடை விதித்து விட்டு சென்னை போன்ற பெரு நகரங்களில் வணிகத்துக்காக மிருகங்களைக்  கொண்டு நடத்தப்படும் பந்தயங்களுக்கு ஊக்கமும் சலுகைகளும் வழங்குவது சரிதானா ? என்று நம்மை பார்த்து கிராமத்து முதியவர் ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...