தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

முதல்வரின் உத்தரவை ரத்து செய்த ஆளுநர்

புதுச்சேரி மாநிலத்தில் அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி பிறப்பித்திருந்த உத்தரவில் அரசு தொடர்புடைய கட்செவி அஞ்சல்,டிவிட்டர் மற்றும் முகநூல் சமூக வலைத்தளங்களின் குழுக்களில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.முதல்வர் வழங்கிய அந்த உத்தரவை தற்பொழுது ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளார் புதுவை யூனியின் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி.

முன்னதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அணைத்து அதிகாரிகள் இடம் பெற்றிருந்த கட்செவி அஞ்சல் குழுவை நடத்தி வந்தார்.இந்நிலையில் கூட்டுறவு சங்க பதிவாளர் சிவக்குமார் ஆபாச படம் பதிவிட்டதாக எழுந்த பிரச்சனையால் அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.மேலும் அவர் மீது சட்டப் பூர்வ நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டார்.இதனை அடுத்து அரசு தொடர்புடைய கட்செவி அஞ்சல்,டிவிட்டர் மற்றும் முகநூல் சமூக வலைத்தளங்களின் குழுக்களில் இருந்து அரசு அதிகாரிகள் உடனே வெளியேற வேண்டும் என்று கடந்த திங்கள்கிழமை முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...