இந்த நாட்டில் கல்லூரிகளில் சேர்ந்து பயில மாணவர்களுக்கு குறைந்த பட்ச கல்வி தகுதி தேவைப்படுகிறது அதே கல்லூரிகளில் பேராசிரியராகவோ அல்லது விரிவுரையாளராகவோ பணியாற்ற நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி தேவைப்படுகிறது ஆனால் இதைப்போன்று கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கும் நடத்திச்செல்வதற்கும் ஏதேனும் கல்வி தகுதி உள்ளதா ? அவ்வாறு ஒரு கல்லூரியை நடத்தும் அளவிற்கு அறிவுத்திறன் இல்லாதவர்கள் எல்லாம் ஏரியையும் நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி கல்வி வள்ளல் என்று தங்களுக்கு தாங்களே எப்படி அடைமொழிகளை பேருக்கு பின்னால் இணைத்து கொள்கிறார்கள் ? இதைப்போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நம் முன் எடுத்து வைக்கிற திரைப்படம் தான் பைரவா ஆனால் இது இளைய தளபதி விஜய் நடித்திருக்கும் திரைப்படம் என்பதால் திரைக்கதையில் எதார்த்தம் லாஜிக் போன்ற எந்த அம்சங்களும் கிடையாது ஆனாலும் விஜய்யின் இதற்கு முந்தைய மசாலா படங்களுடன் ஒப்பிடுகையில் இது பரவாயில்லை என தோன்றுகிறது.
வங்கியில் பெருமளவில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாத ரவுடிகளிடம் பணம் வசூல் செய்யும் அதிகாரிதான் விஜய் அவரின் நண்பராக சதீஷ் அவர் தோன்றும் காட்சிகளில் டைமிங்கில் காமெடி செய்து சிரிக்க வைக்கிறார்.ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருநெல்வேலியில் இருந்து சென்னை வரும் கீர்த்தி சுரேஷை அழைக்க வரும் பொழுது காதல் வயப்படுகிறார்.மலர் கொத்துக்களுடன் தன் காதலை கீர்த்தியிடம் சொல்ல வரும் வேளையில் இவருக்கு முன்னரே மலர்கொத்துக்களுடன் கீர்த்தியை நெருங்கும் ஒருவரின் கை வெட்டப்படுகிறது கை வெட்டுப் பட்டவர் மத்திய அமைச்சரின் மகனாம் அமைச்சரின் ஆட்கள் கீர்த்தியை சுற்றி வளைக்க அமைச்சருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது அதனை எடுத்து எதிர்முனையில் இருப்பவர் யாரென்று தெரிந்ததும் அமைச்சரே பம்முகிறார் இதனை பார்த்த விஜய் கீர்த்தியிடம் விவரம் கேட்கிறார் அப்பொழுது தொடங்குகிறது பிளாஷ் பேக் கீர்த்தியின் கதையை கேட்ட விஜய் அவருக்கு உதவி செய்ய வில்லனான ஜெகபதி பாபுவை எதிர்த்து வெற்றிகாண்கிறார் இது தான் பைரவா திரைப்படத்தின் சுருக்கமான கதை.
முதல் பாதி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை அதனுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதியின் வேகம் சற்று குறைவுதான்.சண்டை காட்சிகளை படமாக்கிய விதத்திற்கு ஒளிப்பதிவாளர் சுகுமாரை பாராட்டிய தீர வேண்டும் சண்டைக் காட்சிகளில் விஜய்யின் உழைப்புக்கும் ஒரு சபாஷ் போடலாம்.கீர்த்தி முதல் பாதியில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் இரண்டாம் பாதியில் விஜய்யை சுற்றியே காட்சிகள் இருப்பதால் அவருக்கு குறைவுதான்.ஜெகபதி பாபு பலவீனமான வில்லனாக நடித்து இருக்கிறார் கடைசிவரை ஹீரோவிடம் தோல்வியுற்று இறுதியில் உயிரை விடுகிறார்.மொத்த திரைப்படத்தையும் தூக்கி சுமந்து இருக்கிறார் விஜய் இந்த திரைப்படத்தில் அவரது வசன உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது அவருடைய ரசிகர்களுக்கு இது மெகா விருந்து.விஜய்,கீர்த்தி,ஜெகபதி பாபு ,சதீஷை தவிர மேலும் ஒருவரின் நடிப்பை பாராட்டியே தீர வேண்டும் அது டானியல் பாலாஜியை தான் இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு நிச்சயம் பேசப்படும்.சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கின்றன.கமெர்ஷியல் வெற்றிக்காக விஜய் என்ற மாஸான ஒருவரை கொண்டு கருத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் பரதன்.
மொத்தத்தில் நடுநிலை திரை ரசிகர்களை பொறுத்த வரையில் ஒருமுறை பார்க்கலாம் ரகம் தான் ஆனால் விஜய் ரசிகர்களை பொறுத்த வரையில் இந்நேரம் வெற்றி விழாவே கொண்டாடியிருப்பார்கள்.

0 comments:
கருத்துரையிடுக