தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிப்ரவரி 2017லும் மழைக்கு வாய்ப்பு

நாளை முதல் மழையின் அளவு தமிழகத்தில் படிப்படியாக அதிகரிக்கும் எனவும்  மேலும் நாளை தொடங்கும் மழையானது  அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பகுதிகளில் பரவலாக பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது அத்துடன் மழை முடிந்து விடுமா என்று கேட்டால் அது தான் கிடையாது இந்த மாதம் முழுவதும் சில இடங்களில் விட்டு விட்டும் ஒரு சில இடங்களில் தொடர் மழையாகவும் பொழியும். ஜனவரி 25க்கு பிறகு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை பொழிய வாய்ப்புகள் உள்ளது

புதுச்சேரியை பொறுத்தவரையில் ஜனவரி 20ஆம் தேதி இரவு தொடங்கும் மழை 22ஆம் தேதி காலை வரை தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளது.பின்னர் ஜனவரி 26ஆம் தேதி முதல் மீண்டும் மழை பொழியும்.

காரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரையில் நாளை தொடங்கும் மழை ஜனவரி 22ஆம் தேதிவரை நீடிக்கும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் தொடர் மழைக்கான வாய்ப்பு  மிகவும் குறைவு அதன் பின் ஜனவரி 25ஆம் தேதி மீண்டும் மழை தொடங்கலாம் அது ஜனவரி மாத இறுதிவரை விட்டு விட்டு தொடரலாம்.

வங்கக்கடல் பகுதியில் சுமத்ராவுக்கு அருகில் 2017 ஜனவரி மாத இறுதியில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு இருக்கிறது அவ்வாறு அது உருவாகி மேற்கு நோக்கி நகரும் பட்சத்தில் பிப்ரவரி 2017லும் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் மழையை எதிர்பார்க்கலாம்.

ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களின் தொடர் போராட்டத்திற்கு இந்த மழை ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே மழை வர கூடாது என்று நினைக்கிறேன் ஆனால் இயற்கையை யாராலும் தடுக்க முடியாது.மாணவர்களின் மன வலிமை இந்த தொடர் மழையினும் பெரியதாகவே இருக்கும் என நம்புகிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...