தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் 3 உயிர்களை காப்பாற்றி மரணமடைந்த வீரர்

16-01-2017 காணும் பொங்கலையொட்டி கடற்கரையில் குளிக்க முயன்ற இளைஞர்கள் மூவர் அலைகளின் சிக்கி கடலில் மூழ்கி  தத்தளித்து கொண்டிருந்த பொழுது அவர்களை காப்பாற்ற முயற்சி செய்து காப்பாற்றிய பிறகு பரிதாபமாக கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கிறார் புதுச்சேரி அரசு தீயணைப்பு துறையில் பணிபுரியும் ஊழியர் திரு.புகழேந்தி.

புதுச்சேரியில் பணிபுரிந்து கொண்டிருந்த இவரின் சொந்த ஊர் காரைக்கால் பொங்கல் விடுமுறையை குடும்பத்தினருடன் இன்பமாய் கழிக்க சொந்த ஊருக்கு வந்த அவர் காணும் பொங்கலை கொண்டாட காரைக்கால் கடற்கரைக்கு சென்றிருக்கிறார் அப்பொழுது அவர் கண்முன்னே மூன்று இளைஞர்கள் கடலில் சிக்கி போராடி கொண்டிருந்ததை பார்த்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் போராடி மூன்று உயிர்களையும் காப்பாற்றிய அவர் கடலில் மூழ்கி உயிரிழந்து இருக்கிறார்.மூன்று உயிர்களை காப்பாற்றிய தீயணைப்பு வீரர் உயிரிழந்த செய்தி காரைக்கால் மக்களிடத்தில் ஒரு இனம் புரியாத சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...