தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் நாளை முதல் மீண்டும் மழை

காரைக்கால் மாவட்டத்தில் நாளை 25-01-2017 முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜனவரி மாத இறுதி வாரத்தில் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் மழை பொழிவது என்பது ஒரு அரிதான விஷயம் தான்.அது மற்றும் இன்றி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனேக கடலோர மாவட்டங்களிலும் சில உள்  மாவட்டங்களிலும் நாளை மறுநாள் 26-01-2017 குடியரசு தினம் அன்று கன மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது.

காரைக்கால் மாவட்டத்தை பொறுத்த வரையில் இன்று 24-01-2017 மழைக்கான வாய்ப்பு மிகவும் குறைவு இரவு நேரத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் நாளை 25-01-2017 மதியத்திற்கு மேல் மழை தொடங்கலாம் அதற்கு மறுநாளான 26-01-2017 அன்று கன மழைக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது அதன் பின்னரும் காரைக்காலில் மழை தொடர வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...