தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் இன்றும் நாளையும் மழை இருக்காது

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முன் தினம் தொடங்கிய மழையானது நேற்று இரவு வரை விட்டு விட்டு பெய்து வந்தது ஆனால் இந்த முறையும் நாம் எதிர்பார்த்த அளவை விட மழை மிகவும் குறைவாகவே பெய்துள்ளது அதே சமயம் தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு மழை பெய்திருக்கிறது நாம் என்னதான் செயற்கைகோள் புகைப்படங்களையும் புதிய தொழில் நுட்பங்களினால்  கிடைக்கப் பெரும் தகவல்களை கொண்டு மழை வருவதை கணித்தாலும் அதன் அளவை சரிவர துல்லியமாக கூற முடிவதில்லை அது சரி இயற்கையை யாரால் தான் கட்டுப்படுத்திவிட முடியும்.

தற்பொழுது நிலவும் சூழ் நிலைகளைக் கொண்டு பார்க்கும் பொழுது இன்றும் (22-01-2017) நாளையும் (23-01-2017) காரைக்கால் மாவட்டத்தில் மழைக்கான வாய்ப்பு கிடையாது 23-01-2017 அன்று மாவட்டத்தின் தென் பகுதியில் மேக மூட்டத்தையும் சில நிமிட தூறலையும்  எதிர்பார்க்கலாம் அதற்கும மறுநாளான 24-01-2017 அன்று மாலை அல்லது இரவு நேரத்தில் இருந்து மழை தொடங்கலாம் 25ஆம் தேதி காரைக்காலில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளது.



 


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...