தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

www.karaikalindia.comன் இனிய 2017 புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த வருடத்தின் முதல் பதிவை இயற்றும் இந்த தருணத்தில் தளத்தின் முதல் பதிவை நினைவு கூறுகிறேன்.www.karaikalindia.com என்று ஒரு நகரத்தின் பெயரை முன்னிலை படுத்திய டொமைன் வாங்கியவுடன் இதனை ஒரு Free Classifieds அல்லது ஒரு e-commerce தளமாக உருவாக்க வேண்டும் என்று தான் எண்ணினேன் ஆனால் அப்பொழுது எனக்கு நிலவிய தற்காலிக பணத் தட்டுப்பாடு மற்றும் நேரமின்மை காரணாமாக இந்த டொமைனை பிளாகாக செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்.விருப்பமின்றி சில பதிவுகளை கடமைக்கு என்று ஆரம்ப காலத்தில் பதிவு செய்து வந்தாலும் எழுதுவதின் அருமை எழுத எழுதத் தான் புரிந்தது.

2017ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று www.karaikalindia.comன் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றிய தமிழ்மணம் போன்ற அனைத்து தமிழ் திரட்டிக் களுக்கும் உறுதுணையாக இருந்த இதர தமிழ் தளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.எல்லாவற்றுகும் மேலாக இந்த தளத்தின் தினசரி வாசகர்களுக்கும் இதன்  பக்கங்களை சமூக வலைத்தளங்களில் பின் தொடரும் வாசகர்களுக்கு எனது நன்றியையும் 2017 புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிதாய் பிறந்திருக்கும் இந்த 2017ஆம் ஆண்டு உங்களுடைய துன்பங்கள் அனைத்தையும்  நீக்கி அனைவரின் வாழ்விலும் அன்பையும் ,மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஒரு புதிய ஆண்டாக மலர எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...