தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பிரதமர் மோடியின் ஜனநாயக ரயில்

நாம் குடிமக்களாகிய நமது பொறுப்புகளையும், கடமைகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும். பொறுப்பு, கடமை ஆகிய இரு தண்டவாளங்களில்தான் ஜனநாயகம் என்ற ரயிலால் முன்னேறிச் செல்ல முடியும் இப்படி நான் கூறவில்லை நமது பாரத பிரதமர் மோடி ஜி அவர்கள் தான் கூறியிருக்கிறார்.அவர் கூறிய அந்த ஜனநாயக ரயிலில் மக்கள் பயணிக்க முடியுமா என்று தான் தெரியவில்லை அதில் பயணம் செய்ய வசதிபடைத்த முதலாளியாகவோ அல்லது அரசியல் பிரபலமாகவோ இருக்க வேண்டும் போல.மேலும் அவர் மாணவர்களுக்கு வழங்கிய அறிவுரையில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் ஐயாவை புகழ்ந்து பேசியுள்ளார் இதோ அவர் பேசியது பள்ளித் தேர்வு என்பது என்பது "வாழ்வா - சாவா' போட்டியில்லை என்பதை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும். பிறருடன் போட்டிடுவதற்குப் பதில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரைப் போல தனக்கு தானே போட்டியிட்டு வெல்வதுதான் உண்மையான வெற்றியைத் தரும்.
மாணவர்கள் மதிப்பெண் பெறுவதை குறிக்கோளாகக் கொள்ளாமல், கல்வியறிவு பெறுவதையே முக்கியக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விமானப் படைப் பணியாளர் தேர்வில் தோல்வியடைந்தார். அந்தத் தோல்வியை ஏற்காமல் தவறான முடிவெடுத்திருந்தால் இந்தியா ஒரு மகத்தான குடியரசுத் தலைவரை இழந்திருக்கும் என்றார் அவர்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...