தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி காரைக்காலில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக குவிந்த இளைஞர்கள்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு  தெரிவித்தும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும் இளைஞர்கள் பெருந்திரளாக இணைந்து போராடி வருகின்றனர்.புதுச்சேரி மாநிலத்தின் இளைஞர்களின் இந்த எழுச்சி பாராட்டுக்குரியதே.தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் என்ன பிரச்சனை என்றால் இங்கு அரசியல் கட்சியுடன் தொடர்பு இல்லாத இளைஞர்களை விறல் விட்டு எண்ணிவிடலாம் ஆயினும் எந்தக் கட்சியையும் முன்னிறுத்தாமல் கட்சி பேதமின்றி இளைஞர்கள் அனைவரும் இணைந்து போராடும் இந்த போராட்டம் மிக சிறப்பு வாய்ந்ததே.

புதுச்சேரயில் AFT மைதானத்தில் நேற்று இரவு முதல் குவிந்த இளைஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர் அதைப்போல காரைக்கால் தில்லைஸ் புட் பார்க் அருகில் இன்று காலை முதல் இணைந்த இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மெல்ல மெல்ல மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொன்டே வருகிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...