தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவ மழை பொய்த்துப்போன காரணத்தால் வானம் பார்த்த பூமியென்று போற்றப்பட்ட இடமெல்லாம் வறண்ட நிலமாக காட்சியளிக்கும் அவலம் அரங்கேறிவிட்டது.மத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்சனையால் தங்கள் வலியை சொல்ல வார்த்தையின்றி தவித்த விவசாய மக்கள் இன்று வறட்சியால் வாழ்விழந்து போயிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திருக்கிறார் புதுவை முதல்வர் நாராயணசாமி.காரைக்கால் மாவட்டத்தில்  மட்டும் நாலாயிரத்து நானூறு (4,400) ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் யாவும் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இதே போன்று புதுச்சேரி மாவட்டத்தில் எட்டாயிரத்து தொளாயிரம் (8,900) ஹெக்டேரில் பயிரடப்பட்டுள்ள பயிர்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் நிலவரியினை  முழுவதுமாக ரத்து செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதிபெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதுச்சேரி முதல்வர் திரு நாராயணசாமி ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...