தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

அமைச்சர்களால் ஓரங்கட்ட படுகிறாரா கிரண்பேடி?

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்கள் வறட்சி பாதிப்பு அடைந்த பகுதிகளாக புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களால் அறிவிக்கப்பட்ட பிறகு ஜனவரி 24 மற்றும் 25இல் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் புதுச்சேரி மாநில சட்டமன்ற கூட்டத்தில் வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்க வலியுறுத்தி விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.இந்த நிவாரண நிதி விவகாரம் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அன்று நடைபெற இருக்கும் கூட்டத்தில் மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்களின் உரை இடம்பெறுமா என்பது கேள்விக்குறி தான்.ஆம் 2017இல் நடைபெற இருக்கும் இந்த முதல் சட்டமன்ற கூட்டம்  ஆளுநரின் உரை இல்லாமலேயே தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

அரசு தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வது தொடர்பான விஷயங்களில் புதுவை மாநில ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில்.இப்பொழுது வெளியாகி இருக்கும் இந்த செய்தி ஆளுநருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்யும் வண்ணம் அமைந்துள்ளது.ஏற்கனவே ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஆர்.ஜே.பாலாஜியிடம் வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட கிரண்பேடிக்கு இது மேலும் நெருக்கடியை ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...