தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஜனவரி 2017 காரைக்காலில் மழை

அரபிக்கடல் பகுதியில் கன்னியாகுமரிக்கு அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகி அதே இடத்தில் நிலை கொண்டு இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக  வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்பது தான் உண்மை கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் வேண்டுமானால் மழை பெய்யலாம் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளிலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மழைக்கான வாய்ப்பு மிக குறைவு என்பதை விட அதற்கான அறிகுறிகள் துளியும் இல்லை என்பது தான் உண்மை.காரைக்காலை பொறுத்தமட்டில் ஓரளவு  மேகமூட்டத்தை வேண்டுமானால் எதிர்பார்க்கலாம்.

அதேசமயம் வங்கக்கடலில் அந்தமானுக்கு அருகே இன்னும் இரண்டு நாட்களில் அதாவது ஜனவரி 17 அல்லது 18இல் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது அது மேற்கு நோக்கி  நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால் ஜனவரி 18ஆம் தேதியில் இருந்து தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை பொழிய வாய்ப்பு இருக்கிறது.

காரைக்காலை பொறுத்தவரையில் ஜனவரி 20,21,22 ஆகிய தேதிகளில் கணிசமான அளவு மழையை எதிர்பார்க்கலாம்.இத்துடன் மழை முடியுமா என்றால் அதை இப்பொழுது உறுதியாக கூற முடியாது இன்னும் சில நாட்களில் வங்கக்கடலில் ஏற்படும் மாற்றங்களை பரிசீலனை செய்த பிறகே உறுதியாக கூற முடியும்.


எது எப்படியோ அடுத்த வாரத்தில் மழை உண்டு என்பது மட்டும் உறுதி.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...