மிருகங்களுக்கு எதிரான செயல்கள் பல நம் நாட்டில் அன்றாடம் அரங்கேறிக் கொண்டு இருந்தாலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதலை தடை செய்வதில் மட்டும் ஏன் இத்தனை முனைப்பு காட்டுகிறது இந்த மத்திய அரசு ? காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து சட்டம் இயற்றிய மத்திய அரசுக்கு இந்த ஏறு தழுவுதல் விவகாரத்தில் மட்டும் ஏன் இவ்வளவு பிடிவாதம் ? இவைகள்தான் இன்று ஏறுதழுவுதல் ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்திருக்கும் கேள்வி அதுமட்டுமின்றி ஊடங்களில் இன்று பரபரப்பான விவாதங்களுக்கு உள்ளாக்கப் பட்டுக்கொண்டிருக்கும் தலைப்பும் இது தான்.தொலைக்காட்சி ஊடகங்களை பொறுத்தவரையில் அவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதை விட விவாதங்களை பரபரப்பாக்கி தங்கள் தொலைக்காட்சி நிறுவனத்தின் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்திக் கொள்வதிலேயே தான் கவனம் செலுத்தி வருகின்றன அதனால் எந்த விவாதங்களும் தெளிவான ஒரு காரணத்தை முன் வைத்ததாக தெரியவில்லை.
பல பேர் விவாதத்தின் பொழுது இது ஐயாயிரம் வருடமாக நடைபெற்று வருகிறது இதனை தடை செய்யக்கூடாது என்று தங்கள் கருத்தை முன்வைக்கின்றனர் அப்பொழுது தான் என் மனதில் ஒரு கேள்வி எழுந்தது இந்த தடைக்கு காரணமே அதன் தொன்மையாக என் இருக்கக் கூடாது ?ஆம் உலகின் பல நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற தொன்மையான பொருட்களிலும் படிமங்களில் ஏறுதழுவுதல் தொடர்புடைய தகவல்கள் இடம்பெற்று இருக்கின்றன.எகிப்து நாட்டு பிரமிடுகளில் கூட காலை மாடுகளின் உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.இவைகள் மட்டுமல்லாது உலகின் தொன்மையான சிந்து சமவெளி நாகரிகத்தை உலகுக்கு அடையாளம் காட்ட நடந்த தொல் பொருள் ஆய்வின் பொழுது கிடைக்கப்பெற்ற பொருட்களில் ஒன்றில் ஒரு மாட்டை சுற்றி மனிதர்கள் நிற்பது போலவும் அதனை பிடிக்க முற்படுவது போலவும் காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன என்பது தகவல் இவைகள் அனைத்தும் உண்மையானால் இன்றளவும் அந்த விளையாட்டை பல தலைமுறைகளை கடந்தும் நடத்திக் கொண்டு வந்துதிருக்கும் தமிழினம் தான் அந்த சிந்து சமவெளி நாகரிகத்துக்கே முன்னோடி என்றாகிவிடும்.தமிழன் பேசிய மொழியான தமிழ் உலகிற்கே தாய் மொழி என்பதும் உறுதியாகிவிடும்.சமஸ்கிரதத்தையே இந்தியாவின் தொன்மையான மொழி என்று சூளுரைக்கும் கூட்டத்திற்கு எல்லாம் இது பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் அந்த அதிர்ச்சியே இந்த தடைக்கான காரணமாக கூட இருக்கலாம்.மொத்தத்தில் இது ஒரு மொழிப்போர் என்று தான் கூற வேண்டும்.
என்னது இது ஒரு மொழிப்போரா ? என யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம் இது இன்று புதிதாக உருவான விஷயமல்ல ஒரு காலத்தில் நாட்டின் தேசிய மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்ட பொழுது அதற்கு காரணமாக அந்த மொழி பேசும் நபர்களின் எண்ணிக்கையை கூறினார்கள் அப்பொழுது அதற்கு கடும் போட்டியாக விழங்கியது வங்க மொழிதான் இன்று வங்க மொழியின் நிலை என்ன? வங்க மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு அவர்களிடம் ஏன் இத்தனை பிளவுகள் ? இதனை அனைவரும் ஒருமுறை எண்ணிப்பார்க்க வேண்டும்.
ஜெர்சி பசு ,சர்க்கரை நோய் மருந்து விற்பனை ,சர்வதேச அரசியல் என பல காரணங்களை முன் வைக்கும் இவர்களுக்கு இந்த தடைக்கு பின்னால் ஒரு மொழிப்போர் இருக்கலாம் என்று ஏனோ தோணவில்லை அது சரி உண்மையை எப்படி நம்மைத் தெரிந்து கொள்ள விடுவார்கள் .
- இமானுவேல்.ச

0 comments:
கருத்துரையிடுக