தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஜல்லிக்கட்டு : மாணவர் போராட்டம் களைக்கப்பட்டதன் உண்மை காரணம் ?

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற  வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மாணவர்கள் நேற்று முன்தினம் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று திடீரென மாணவர்கள்  கூட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டதாகவும் அதனால் மாணவர்களுக்கு எந்த வித ஆபத்தும் வந்து விடக்கூடாது என்று கூறியும்  போராட்டத்தை இத்துடன் முடித்துக்கொண்டு மாணவர்கள் களைந்து செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என்று போராட்டத்தில் மாணவர்களுடன் இணைந்து  ஈடுபட்டு வந்த திரையுலக நட்சத்திரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கூறினர்.இதற்கு முன்னரே ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து போராடி வந்தவர்களெல்லாம் அவசர சட்டம் இயற்றிய உடனே போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு கூறிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.எது எப்படியோ நேற்றுடன் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி நடைபெற்று வந்த போராட்டம் நிறைவு பெற்றது.

ஆனால் புதுச்சேரி மாநிலத்தில் இந்த போராட்டம் கையாளப்பட்ட விதமே வேறு அங்கு யாரும் போராட்டத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட வில்லை.மாணவர்கள் மீது தடியடியும் நடத்தப்பட வில்லை.இதெற்கு காரணம் புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாராயணசாமி ஒழிக ! ரங்கசாமி ஒழிக ! என குரல் எழுப்பவில்லை தேவையில்லாத அரசியல் பின்னணியை அங்கு வெளிப்படுத்த வில்லை.ஆனால் தமிழ் நாட்டில் அப்படியல்ல அவர்களின் மாநில அரசியல் தலைவர்களையே கேலி செய்தும் விமர்சனம் செய்தும் குரல் எழுப்பினர்  போராட்டம் களைக்கப்பட்டதற்கு அதுவே  கூட ஒரு காரணமாக இருக்கலாம்.தமிழக அரசு நினைத்திருந்தால் இந்த போராட்டத்தை என்றோ நிறுத்தியிருக்க முடியும் என்பதை காட்டவே நேற்று அந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கலாம்.

ஆரம்பத்தில் இது வெறும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான ஒரு போராட்டமாக தான் இருந்தது மாணவர்கள் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியவுடன் இதை புரட்சி என்று ஊடகங்கள் செய்தி வெளியிட ஆரம்பித்தன அதற்கு பின் தான் சில திரை நட்சத்திரங்கள் தாமாகவே முன் வந்து இந்த போராட்டத்தில் இணைந்தனர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர் அதன் பின் போராட்டம் வலுப்பெற்றது கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளும் மாறின சிலர் தனி தமிழகம் குடியரசு தின எதிர்ப்பு என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர் இதைப்போன்ற விஷயங்கள் உழவுத்துறை மூலம் எப்படியும்  மத்திய அரசுக்கு தெரிந்து இருக்கும் போராட்டத்தை களைக்கப்பட்டதற்கான காரணம் அதுவாக கூட இருக்கலாம்.

போராட்டத்தில் ஈடுபட்ட திரை நட்சத்திரங்களின் புகைப்படங்களை முகநூல் மற்றும் வாட்சப்பில் வெளியிட்டு அடுத்த முதல்வர் இவர் தான் என்று வைரலாக பரவி வந்த செய்திகள் பலருக்கும் கடுப்பை கிளம்பியிருக்கும்.ஆனால் அந்த செய்திகளை பரப்பியது மாணவர்கள் தானா அல்லது அந்த திரையுலக நட்சத்திரங்களே ஆள் வைத்து பரப்ப சொன்னார்களா என்று சரியாக தெரியவில்லை எதுவாயினும் இது கூட போராட்டம் களைக்கப்பட்டதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

இப்படி யோசனை செய்ய செய்ய புதுப்புது காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் மொத்தத்தில் போராட்டம் களைக்கப்பட்டதற்கு இவர் தான் காரணம் அவர் தான் காரணம் என்று யார் மீதாவது பழி கூறுவதை விட்டு விட்டு நாம் எதற்காக போராட்டத்தை தொடங்கினோமோ அதை மறந்து பிறர் கூறியதை செய்ய ஆரம்பித்தோமே அந்த செயல் தான் காரணம் என்பதனை ஏற்றுக்கொண்டால் நல்லது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...