தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சின்னம்மா இப்படி பண்ணுறீங்களே மா....

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின்  மறைவுக்கு பிறகு அதிமுகவின் எதிர்காலம் குறித்து அந்த கட்சி நிர்வாகிகளுக்கு கலக்கம் இருந்ததோ இல்லையோ ஆனால் முக்கிய எதிர் கட்சிகளின் கவனம் முழுவதும் தலையிழந்து இருந்த கட்சியை எப்படி தடுமாற செய்வது என்பதில் தான் இருந்ததாம்.சசிகலாவை சின்னம்மா என்று அழைத்து ஒரு சிலர் முன்னிலை படுத்த முற்பட்ட பொழுது கட்சி இரண்டாக உடைவது உறுதி என ஏதும் பேசாமல் வாய்மூடி காத்திருந்தனராம்.ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் இன்னும் நான்றரை ஆண்டு கால ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் சில நடவடிக்கைகளில் அந்த கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டதால் காத்திருந்த எதிர்க்கட்சிகளுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும் தானாம் ஒரு கட்டத்தில் சசிகலா தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என உறுதியானதும் இது போதுமே அவர் வாய் திறக்கவே மாட்டார் என்று எண்ணியிருந்தனராம் ஆனால் காகிதத்தில் எழுதியிருந்ததை பார்த்து படித்தாலும் அதனை நிதானத்துடன் கையாண்ட சின்னம்மாவின் திறனைக் கட்டு சற்று  கலங்கி தான் போய்விட்டனராம்.ஆட்சி களையும் மாரு தேர்தல் வரும் என்று எண்ணியவர்களுக்கு இந்த நிகழ்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

எது எப்படி நடந்தாலும் கட்சி இரண்டாக பிரிந்தே ஆக வேண்டும் என்று தீபாவின் பின்னால் சென்ற கூட்டத்துக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கி வருகின்றனவாம் எதிர்க்கட்சிகள்.இந்நிலையில் தான் முதல்வர் பதவியை சின்னம்மா ஏற்க வேண்டும் என்று கூட்டம் கட்சிக்குள் கூறி வருகின்றதாம்.இதனால் அதிமுக கட்சியில் பலபேருக்கு ஒரு கடுப்பு இருந்தாலும் மீதம் உள்ள நான்றரை ஆண்டை நினைத்து அமைதியாக உள்ளனராம் கூடிய விரைவில் இடைத்தேர்தல் வந்தாலும் சின்னம்மாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கப் போவதில்லை என்றும் ஒரு கூட்டம் கட்சிக்குள்ளேயே சொல்லி வருகிறதாம்.ஆனால் சசிகலா முன்பு போல் இப்பொழுது கிடையாதாம் எதையும் யோசித்து செய்கிறாராம் எப்படி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வது என்பதை விவாதிக்க ஒரு தனி குழுவே வைத்திருக்கிறாராம்.கூடிய விரைவில் சின்னம்மாவின் விஸ்வரூபத்தை அரசியலில் பார்க்க போகிறோம் என்று அவரின் ஆதரவாளர்கள் பெருமை பேசி வருகிறார்களாம்.

கட்சி உடையும் ஆட்சி நம்மை தேடி வரும் என்று எண்ணியவர்கள் எல்லாம் இப்பொழுது சசிகலாவை பார்த்து என்னம்மா இப்படி பண்ணுறீங்களே மா .....என்று கேட்பதை போன்று நகைச்சுவை சுவரொட்டிகளை தொண்டர்கள் தயார் செய்ய உள்ளனராம்.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...