தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒளிந்திருக்கும் அரசியல்

உலகெங்கும் நடைபெற்று கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டங்கள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான மத்திய அரசின் கொள்கைகளுக்கும் மக்களை தங்களுக்கான வாக்குகளாக மட்டுமே பார்க்கும் சில அரசியல் எதிரான எண்ணத்திற்கும் எதிரான ஒரு அமைதிப் போர் என்று தான் கூற வேண்டும்.ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் முறை, மிருகங்களின் வதை, ஜல்லிக்கட்டு என்ற ஒரு விளையாட்டு சரியானதா ? தவறானதா? என்பது போன்ற தேவையற்ற விவாதங்களுக்கு இடம் கொடுக்காமல் தற்பொழுது ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டால் அது தமிழகத்திற்கு எந்த அளவு நன்மைகளை உருவாக்கும் அல்லது அதனால் ஏதாவது தீமைகள் அரங்கேற வாய்ப்புகள் உள்ளதா என்பதை பற்றி மட்டும் தற்பொழுது விவாதிப்போம்.

இது இளைஞர்களின் எழுச்சி புரட்சி என்று கூறும் நாம் அப்படி கூறுவதற்கு முன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றால் என்ன பயன் என்ற கேள்வியை போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு இளைஞர்களிடமும் தனித்தனியே கேட்கவேண்டும்.முதலில் நான் எனது வாழ்நாளில் இதுவரை கண்டிராத மாணவர் புரட்சியை கண்டுவிட்டேன் என்ற மகிழ்ச்சியுடன் தான் இருந்தேன்.ஆனால் போராட்டத்தில் கூடியிருந்த இளைஞர்களிடம் ஜல்லிக்கட்டு ஏன் நடத்தப்பட வேண்டும் என்ற கேள்வியை ஊடக நண்பர்  ஒருவர் முன்வைத்தார் அதற்கு ஒரு இளைஞர் இது எங்களின் பாரம்பரிய விளையாட்டு அதனால் எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும் என்றார் மறுபடியும் அந்த ஊடக நண்பர் அவரிடம் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதால் என்ன பயன் என்று கேட்டார் அதற்கு சிறிது நேரம் யோசித்த அந்த இளைஞர் ஜல்லிக்கட்டு பாரம்பரிய விளையாட்டு எங்களுக்கு ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்று கூறினார் இது இவர் ஒருவரின் பதிலாக என்னால் பார்க்க முடியவில்லை இவரைப்போல கூடியிருந்த இளைஞர்களில் பலருக்கும் ஜல்லிக்கட்டின் பயன் என்னவென்ற கேள்விக்கு பதில் தெரியாது என்பதே உண்மை .ஒவ்வொரு மாணவரும் நாம் எதற்காக போராடுகிறோம் அதனால் கிடைக்கப்பெறும் நன்மை தீமைகள்  என்னவென்று  தெரிந்து போராடினால் தான் அதை எழுச்சி புரட்சி என்று கூறமுடியும்.மேலும் இந்த போராட்டத்தை வழிநடத்தும் இளைஞருக்கு பின்னால் யாரும் இல்லை என்பதையும்  தமிழக அரசும் காவல்துறையும் போராட்டத்திற்கு எதிர்ப்பாக இருந்தது என்பதையும் முற்றிலும் ஏற்க முடியாது.டாஸ்மாக்குக்கு எதிரான போராட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பை எப்படி வெளிப்படுத்தியது என்றும் அந்த போராட்டம் என்ன ஆனது என்றும் உங்களுக்கே தெரியும்.ஊடகங்களின் உதவியில்லாமல் வெறும் சமூக வலைத்தளங்களை கொண்டே இவ்வளவு மக்கள் கூடினார்கள் என்பதையும் என்னால் ஏற்க முடியாது.நான் கூறும் கருத்துக்களால் பல இளைஞர்களுக்கு நான் இன்று ஆகாதவனாக கூட ஆகிவிடலாம் ஆனாலும் என்னால் உண்மையை கூறாமல் இருக்க முடியாது.

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் கிடையாது ஆனால் முதலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடை செய்யப்பட்ட பொழுது தமிழ் நாட்டில் நிலவிய சூழ்நிலைகள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.அக்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை மையமாக கொண்டுதான்  பல ஜாதிய  வன்முறைகள் அரங்கேறி இருக்கின்றன மாட்டை குறிப்பிட்ட ஜாதியை சார்ந்த  ஆட்கள் பிடிக்கக்கூடாது என்றெல்லாம் விதிமுறைகளே  உண்டு.மாணவர்களின் போராட்டத்தில் இருந்த ஒற்றுமை இனிமேல் நடத்தப்படவிருக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டுகளிலும் தொடர வேண்டும் என்பதே எமது எண்ணம்.

முகநூலில் மாணவர்கள் தொலைக்காட்சி ஊடகங்களை கழுவி கழுவி ஊத்துகிறார்கள் ஆனாலும் இப்பொழுதும் அந்த ஊடகங்களில் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த செய்திகள் தான் தொடர்ந்து ஒளிபரப்பட்டு வருகின்றன.இதையெல்லாம் பார்க்கும் பொழுது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஸ்வாதி கொலையில் பின்பற்றப்பட்ட யுக்தி தான் நினைவுக்கு வருகிறது.ஆம் அந்த கொலை நடந்த பொழுது தமிழகத்தில் வேறு சில கொலைகளும் அரங்கேறின ஆனால் அதைப்பற்றிய  ஒரு தெளிவான தகவல் யாருக்கும் தெரியாமலயே போய்விட்டது.அதைபோல் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த ஊடகங்களில் தொடர் செய்திகளும் எதோ ஒரு முக்கிய விஷயத்தை மக்களிடம் இருந்து மறைக்க பயன்படுத்தப் படுகிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.உதாரணமாக வறட்சி நிவாரணத்தை மறந்தே போய்விட்டோம் காவிரி மேலாண்மை வாரியம் என்ன ஆனது என்றே தெரியவில்லை காவிரி விவகாரத்தில் நம்முடன் போட்டிபோடும் கர்நாடக அரசும் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருக்கிறது அது ஒரு கூறிய அரசியல் பார்வையாக கூட இருக்கலாம் இதெல்லாம் வெறும் சாதாரண காரனங்கள் தான் உண்மையில் இதற்கு பின் இருக்கும் மிகப் பெரிய அரசியல் காரனங்கள் என்னவென்று போக போக தான் தெரியும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

1 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...