தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஜல்லிக்கட்டு போராட்டத்தை வழிநடத்திய ரகசிய இயக்கம்

ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக தமிழகம் எங்கும் நடத்தப்பட்ட போராட்டத்தை வழிநடத்திய 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இந்த தகவலை ஹிந்து நாளிதழ் தனது அதிகார பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட பொழுது அதிர்ந்து போனேன் மகிழ்ச்சி கலந்த ஒரு படபடப்பு எனக்குள் மேலும் அதை படிக்க படிக்க எனக்குள் ஒரு பரவசம் இதோ அதை உங்களுக்கும் பகிர்கிறேன் இவர்களுக்குத் தலைமை கிடையாது. தங்களில் யாரையும் தலைவர் என்று சொல்லுவதும் இல்லை. இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவதாகத் தெரிகிறது. தங்கள் அடையாளத்தை வெளியிடாமல் ஓரிரு வரிகளில் ஓரிருவர் மட்டுமே பேட்டியும் அளித்திருப்பதால்தான் தகவலாக வெளி வந்திருக்கிறது. இவர்கள் 12 குழுக்களாகவும், ஒவ்வொரு குழுவிலும் 200 பேர் இருப்பதாகவும்   அதில் சொல்லப்பட்டு இருக்கிறது மேலும் இந்தக் குழுவில் அனைவரும் தொழில்நுட்பத் துறை, வேறு துறைகளில் பணியாற்றும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது. இக்குழுவில் அல்லாமல், சுய ஆர்வத்துடன் பலரும், வயது வேறுபாடின்றி பெண்களும் இக்குழுவுடன் இணைந்து பணியாற்றியதாகவும்  சொல்லப்பட்டிருக்கிறது. அரசியல் மற்றும் சினிமா சார்பில்லாத இளைஞர் குழு அதை அவர்கள் சுத்தமாக விரும்பவில்லை. இவர்கள்தான் ராணுவக் கட்டுப்பாட்டுடன் மெரினாவில் இயங்கியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த தகவலை கேள்விப்படும் பொழுது என்னை அறியாமலேயே எனது ஆர்வம் முந்திக்கொண்டு  இதெல்லாம் நம்பும் படியாகவா இருக்கிறது ? என்ற கேள்வியை என் அறிவுக்கு முன்னாள் வைத்தது.யாரை இருந்தாலும் இந்த விஷயத்தை முதலில் நம்ப மறுப்பார்கள் என்பது உண்மைதான் ஆனால் வரலாற்றில் பல காலகட்டங்களில் இதை போல ரகசிய அமைப்புகள் இருந்ததாக இணையத்தில் உலாவி தெரிந்துகொண்டேன் அதைபோல் இது  வாட்ஸ் அப் காலத்து குழு இதில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்வது எவ்வளவோ எளிதாக  உள்ளதோ அதைப்போன்று ஒருவரை தேடிக்கண்டுபிடிப்பதும் எளிதானதாகவே ஆகிவிடுகிறது.
வரலாற்றில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் இதைப்போன்ற ரகசிய அமைப்புகள் பெரும்பாலும் வெளியில் முகம்காட்டுவதற்கு முன்னரே முடக்கப்பட்டுவிடும் என்பது தான் ஆனால் மேல் கூறிய தகவலின்படி ஒரு அமைப்பு இருந்தால் அது வெளியுலகத்துக்கு தெரியாமலேயே முடங்கிவிடக் கூடாது என்பதே நமது விருப்பமாக உள்ளது.

 போராட்டத்தின் இறுதி கட்டத்துல இவனுங்க Anti-நேஷனல் னு  ஒரு வார்த்தைய திரும்ப திரும்ப மாத்தி மாத்தி சொன்னான்ங்களே அது ஒரு வேல இதை தானோ.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...