தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

11-02-2017 இன்று முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் குளிர் குறைய தொடங்கும்

நாம் முன்னரே பதிவிட்டு இருந்தது போல கடந்த வாரத்தில் காலை 4 மணி முதல் 7 மணி வரை நிலவிய குளிர் (வெப்பக்குறைவு ) இனி வரக்கூடிய வாரத்தில் குறையும்.11-02-2017 அன்று காலை காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தில் 24° C அளவு வெப்பம் நிலவும்.நாளை 12-02-2017 அன்று காலை 4 மணி முதல் 7 மணிவரை 11-02-2017 அன்று நிலவிய வெப்பநிலையை விட 1 முதல் 2° C கூடுதலாக இருக்கும்.

மேகமூட்டங்கள் இல்லாத தெளிவான வானிலை குளிருக்கு வழிவகுக்கும் ஜனவரி மாதம் இறுதியில் பெய்த மழைக்கு பிறகு ஏற்பட்ட தெளிவான வானிலையே அந்த வெப்ப குறைவுக்கு காரணம்.13-02-2017 இரவு முதல் தமிழகத்தில் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது அதனால் தான் தற்பொழுது குளிர் குறைந்து வருகிறது.மழை முடிந்த சில நாட்களில் மீண்டும் அந்த தெளிவான வானிலை ஏற்படும் அதனால் 16-02-2017க்கு பிறகு மீண்டும் குளிர் அதிகரிக்க தொடங்கலாம்.

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் 14-02-2017 அன்று ஓரளவு மழையை எதிர்பார்க்கலாம் குறிப்பாக சொல்லவேண்டுமானால் 10 மி.மீ க்கும் குறைவான அளவு மழையையே எதிர்பார்க்கலாம்.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...