தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

18-02-2017 முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் மீண்டும் குளிர்

13-02-2017,14-02-2017 மற்றும் 15-02-2017 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பெரிய அளவு மழை பொழியாமல் போனாலும் குளிர் சற்று குறைந்து இருப்பதை உணர முடிகிறது.இந்நிலையில் வருகின்ற 18-02-2017 முதல் தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் கடலோர பகுதிகளில் மீண்டும் காலை நேர குளிர் நிலவ வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் 17-02-2017 அன்று காலை 4 மணி முதல் 7 மணிவரை தற்பொழுது நிலவும் காலை நேர வெப்பநிலையை விட 1 அல்லது 2° C வெப்பம் குறைந்து காணப்படும்.18-02-2017 அன்று காலை 4 மணி முதல் 7 மணிவரை நிலவும் வெப்ப நிலையானது அதற்கு முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் மேலும் 1°C குறைந்து காணப்படும் உதாரணமாக இன்று காலை 4 மணி முதல் 7 மணிவரை 26°C அளவு வெப்பம் நிலவுகிறது என்று வைத்துக்கொள்வோம் 17-02-2017 அன்று அதன் வெப்பநிலையானது 25 முதல் 24°C ஆக குறைந்து காணப்படும். 18-02-2017 அன்று இது மேலும் குறைந்து 24 - 23°C  என்கின்ற அளவில் இருக்கும்.

18-02-2017 பிறகு அடுத்து வரக்கூடிய வாரத்தில் காலை 4 முதல் 7 மணி  வரை நிலவ உள்ள வெப்பநிலை ஆனது அதற்கு முந்தைய நாட்களுடன் ஒப்பிடுகையில் மேலும் குறைந்து குளிர் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்   உள்ளது.

புதுச்சேரியை பொறுத்தவரையில் 17-02-2017 அன்று காலை 4 - 7 மணி வரை தற்பொழுது நிலவவும் வெப்பநிலையை விட 2 அல்லது 3°C வெப்பம் குறைய வாய்ப்புள்ளது (21°  - 19°C ) தான் இருக்கும் இதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களில் இது மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது.

உண்மையில் கடலோர மாவட்டங்களில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்லலாம் சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் காலை நேர வெப்பநிலை ஆனது 17° முதல் 15°C வரை இருக்கும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...