தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் தனியார் துறைமுக நிலக்கரி இறக்குமதியால் உருவாகும் சுவாச பிரச்சனைகள் மற்றும் தோல் வியாதிகள்

காரைக்கால் மாவட்டம் வாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகமான மார்க் இயங்கிவருகிறது இது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் வெளிநாடுகளில் இருந்து அங்கே நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது காரைக்காலில் வசிக்கும் மக்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும் ? 
சரி நிலக்கரி இறக்குமதியால் என்ன பிரச்சனை இருக்கிறது அது ஒன்றும் ஹைட்ரொ கார்பன் இல்லையே ? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம் ஆனால் உண்மையில் இவ்விரண்டிர்க்கும் பெரிய அளவு வித்தியாசம் ஒன்றும் கிடையாது. சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றி நிலக்கரி இறக்குமதி செய்யும்பொழுது அதில் இருந்து வெளிப்படும் நிலக்கரியின் துகள்கள் காற்றில் கலந்து நாம் சுவாசிக்கும் உன்னதமான காற்றை மாசுபடுத்துகிறது.

சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத இந்த நிலக்கரி இறக்குமதியினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து காரைக்கால் மாவட்டத்தில் யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை ஆனால் வாஞ்சூரை சுற்றியுள்ள தமிழக பகுதிகளான நாகூர் மற்றும் பனங்குடியில் இதற்கான எதிர்ப்புகள் ஏராளம்.இந்த நிலக்கரி இருக்குமதியால் அங்கு வசிக்கும் மக்கள் பல விதமான சுவாச பிரச்சனைகளுக்கும் தோல் சம்பந்தமான வியாதிகளுக்கும் இரையாகி வருவதாக கூறப்படுகிறது.காரைக்கால் மாவட்டம் திருமலைராயன் பட்டினம் ,நிரவி,வாஞ்சூர் ஏன் காரைக்காலில் வசிக்கும் மக்களுக்கு கூட பலருக்கும் சுவாச நோய்களுக்கான அறிகுறிகள் தெரிந்திருக்கும் ஆனால் அதற்கான காரணம் என்னவென்று தான்  தெரிந்திருக்காது.

சரி இதை எப்படி சரி செய்வது ?
சரி செய்வது என்பது சாத்தியமல்ல ஆனால் குறைந்த பட்சம் நிலக்கரி இருக்குமதியின் பொழுது காற்று மாசடையும் அளவை கணக்கிட்டு அதை குறைக்க சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.


செய்தி  :

காரைக்கால் மாவட்டத்தை அடுத்துள்ள தமிழக பகுதியான நாகூரில் நிலக்கரியால் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.அந்த விழாவில் பேசிய நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பொதுதுமக்கள் வேண்டுகோள்களை ஏற்று நாகூரில்  பல இடங்களிலும் பனங்குடியில் ஒரு இடத்திலும் கடந்த 8ஆம் தேதி மாசு கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டது அதன் மூலம் காற்றில் உள்ள மாசின் அளவு துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது அதன் அளவு நம்மை அதிர்ச்சியடைய செய்கிறது இதனால் மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறினார்.மேலும் அந்த கூட்டத்தில் நிலக்கரி இறக்குமதியின் பொழுது செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்வது என தீர்மான இயற்றப்பட்டது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...