தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

போகன் - திரை விமர்சனம்

மது மாது என ராஜ வாழ்க்கை வாழ்கிறார் அரவிந்த்சாமி அதன் பின் வினோத முறையில் ஒரு நகைக்கடையில் பணத்தை கொள்ளையடிக்கிறார் போலீஸ் விசாரணையில் கூட ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை அடுத்த ஷாட்டில் டுமீல் டுமீலுனு ஒரு குத்துப்பாட்டுடன் படத்தின் ஹீரோ எண்டரி  அந்த குத்து பாட்டுக்கு பிறகு தான் அவர் ஒரு போலீஸ் அதிகாரி என்பது படம் பார்க்கும் நமக்கு தெரிவருகிறது அவருடையா தந்தை ஒரு பேங்க் மேனஜர்.ஜெயம் ரவியின் தந்தை பணிபுரியும் வங்கியில் கொள்ளையடித்து செல்கிறார் அரவிந்த்சாமி.ஜெயம்ரவியின் தந்தை பணத்தை எடுத்து செல்வது போன்ற காட்சிகள் சி.சி.டி.வி வீடியோவில் பதிவாகியிருக்கிறது அதனை வைத்து ஜெயம்ரவியின் தந்தையை சிறைபிடிக்க வருகிறது போலீஸ் இந்த விஷயத்தை ஜெயம் ரவி எப்படி சரி செய்கிறார்.பல தந்திரங்கள் செய்து எப்படி அரவிந்த்சாமயை கைது செய்கிறார் என்பது தான் முதல் பாதி ஒரு கட்டத்தில் போகரின் ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு கூடுவிட்டு  கூடு பாயும் வித்தை என கதை பயணிக்கிறது.

இரண்டாம் பாதியில் அறிவிந்தசாமியாக ஜெயம்ரவியும் ஜெயம்ரவியாக அரவிந்த்சாமியும் நடித்திருக்கிறார்கள் அதில் நடிப்பில் வெற்றிபெற்றவர் என்னவோ அறிவிந்தசாமிதான்.

இறுதியில் ஜெயித்தவர் யார் அரவிந்தசாமியா? ஜெயம்ரவியா? இது தான் கதை.


ஜெயம்ரவியின் நடிப்பு சிறப்பு என்றால் அரவித்தசாமியின் நடிப்பு மிகச்சிறப்பு ஹன்சிகா நடிப்பில் கஞ்சத்தனமாகவும் கவர்ச்சியில் சற்று தாரளமயமாகவும் வளம் வந்து இருக்கிறார் இந்த படத்தில் இன்னொரு நாயகியும் இருக்கிறார் ஆனால் எதை வைத்து அவரை இந்தப்படத்தின் இரண்டாம் நாயகி என்று கூறுவது என்பது தான் தெரியவில்லை.கவிஞர் தாமரையின் சிறப்பான வரிகளை கொண்டு பரவாயில்லை என்கிற ரக பாடல்களை கொடுத்து இருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.ஒளிப்பதிவு அழகு


முதல் பாதியில் வேகமாக செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் மெல்ல நகர்கிறது.தனிஒருவன் திரைப்படத்தால் ஏற்பட்ட எதிர்பார்ப்பை இந்த திரைப்படத்தால் சமன் செய்ய முடியவில்லை.மொத்தத்தில் என்னை பொறுத்த வரை இந்த திரைப்படம் ஒரு முறை பார்க்கலாம் ரகம்தான்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...