தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஓ.பி.எஸ் க்கு குவியும் திரைபிரபலங்களின் ஆதரவுகள்

தமிழக முதல்வர் ஓ.பி.எஸ் அம்மா சமாதியில் மேற்கொண்ட மெரினா தியானத்துக்கு பிறகு ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களிலும் ஒரு கதாநாயகன் போல மாறிவிட்டார் ஏற்கனவே சசிகலாவுக்கு எதிராக இருந்த அனைவரும் ஓ.பி.எஸ் உடன் கைகோர்க்க தயாராக உள்ளனர்.ஓ.பி.எஸ் ஆபத்தானவர் அவரை பின்புறம் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக இருந்தாலும் இன்றைய அரசியல் சூழலில் தமிழக இளைஞர்களின் மத்தியில் ஹீரோ அவர்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.சரி தற்பொழுது பேச இருப்பது ஓ.பி.எஸ் க்கு ஆதரவு தெரிவித்துவரும் திரை பிரபலங்களைப் பற்றி தான்.


முதலாவதாக நாம் பார்க்க இருப்பது உலக நாயகன் கமல் .டிசம்பர் 2015 சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபொழுது கமல்ஹாசன் எழுதிய எழுதிய கடிதத்தால் பன்னீர் செல்வத்துக்கும் அவருக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.ஆயினும் இந்த விவகாரத்தில் பன்னீர் செல்வம் திறமையானவர் ஜல்லிக்கட்டு விவகாரத்தை மிகவும் திறமையாக கையாண்டார் அவரே முதல்வராக தொடரட்டும் என தற்பொழுது தெரிவித்துள்ளார்

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் கங்கை அமரன்  : சசிகலாவின் தான் நான் என் சொத்துக்களை இழந்தேன் அவர் முதல்வர் பதவிக்கு வருவது நியாயமா அவரை எதிர்க்கும் முதல்வர் பன்னீர்செல்வம் ஒரு ஆம்பளை சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரவு சசிகலாவுக்கு என்றாலும் மக்களின் ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு தான் நானும் அவரைத்தான் ஆதரிக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்கியராஜ்  : பன்னீர் செல்வமே முதல்வராக தொடரட்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.பன்னீர் செல்வத்துக்கு முதலில் ஆதரவு தெரிவித்தவர்களில் இவரும் ஒருவர்.


இசையமைப்பாளர் இமான் : தமிழக அரசியலில் நம்பிக்கை துளிர்விட்டு இருக்கிறது.இது தான் சிறந்த வழி சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்து சரியான பேச்சு நீதி நிலை நாட்டப்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு : இவர் அரசியல் சார்ந்து இருப்பதால் வெளிப்படையாக கருத்து கூற வில்லை ஆனால் தந்து டிவிட்டர் பக்கத்தில் ஒரு நாயகன் உதயமாகிறான் என மறைமுகமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...