தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் ஏழை மக்களுக்காக உடல் உறுப்பு மாற்று மையம்

கடந்த பந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை தற்பொழுது அதிகரித்து இருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மாறிவரும் வாழ்வியல் முறை ,உணவு பழக்கவழக்கங்கள் ,உணவுப் பொருட்களில் கலப்படங்கள் ,மாசுபட்ட காற்று உள்ளிட்டவைகள் தான்.உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவைகள் ஒரு புறம் அதிகரித்துக்கொண்டே வந்தாலும் தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைகளுக்காக பெருந்தொகை வசூலிக்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையில் தங்கும் செலவு என மொத்தமாக சில லட்சங்கள் கையில் இல்லாமல் உடலுறுப்பு  மாற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்குள் நுழையவே முடியாது என்கின்ற நிலை தான் தற்பொழுது புதுச்சேரியில் நிலவி வருகிறது.

இந்நிலையில் நேற்று 10-02-2017 அன்று இரவு ஜிப்மர் கலையரங்கில் தென் மண்டல சிறுநீரகவியல் மருத்துவ நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது அதில் பேசிய புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் பரிஜா ஜிப்மர் சார்பில் உடல் உறுப்பு மாற்று மையம் ( Institute of Organ Transplantation) தொடங்க ஆட்சிக்குழு கொள்கையில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது எனவும் இது தொடர்பாக திட்ட வரைவு நிதித்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் எனவும் கூறினார்.

கல்லீரல்  மாற்று அறுவை சிகிச்சை  (Liver Transplantation) இன்னும் ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும்.இருதய மாற்று அறுவை சிகிச்சை (Heart Transplantation ) இந்த ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்படும் எனவும் இதுவரையில் 111 பேருக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.மேலும் இதைப்பற்றி அவர் கூறுகையில் இந்த உடல் உறுப்பு மாற்று மையம் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் இருக்கும் எனவும் கூறினார்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...