தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் பூசை விழா 2017

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த திருமலைராயன் பட்டினத்தில் ஐந்து  ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் புகழ் பெற்ற ஸ்ரீஆயிரங்காளியம்மன் கோவில் பூசை திருவிழா இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.


05-06-2017  - இரவு பேழையிலிருந்து அம்பாளை எழுந்தருளச் செய்தல்.

06-06-2017   - மாலை ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீ ராஜசோளீசுவரர்   கோவிலில் இருந்து வரிசை புறப்பாடு.

 07-06-2017  - அதிகாலை மகா தீப ஆராதனையுடன் வழிபாடு.

07-06-2017 மற்றும் 08-06-2017 ஆகிய தேதிகளில் பக்தர்கள் அம்பாளை தரிசிக்கலாம்.

08-06-2017 - இரவு 4.00 மணிக்கு ஆயிரங்காளியம்மன் மீளவும் பேழையில் ஸ்தாபிதம் செய்யப்படும்.


திருமலைராயன்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோவில் வரலாறு 

பல நூறு ஆண்டுகளுக்கு முன் கலிங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் தன்நாடு செழிக்கவும், மக்கள் நலமாக இருக்கவும் என்ன வழி என்று சான்றோர்களையும் சாஸ்திர வல்லுநர்களையும் கேட்டான். அன்னை காளி தேவிக்கு ஓர் ஆலயளம் அமைத்து, தினமும் ஆயிரம் பொருட்களால் அர்ச்சனை ஆராதனை செய்ய வேண்டும். ஒரு நாள் பூ வைத்தால் அடுத்த நாள் பழம். அதற்கு மறு நாள் பலகாரம் இப்படி மாற்றி மாற்றி வைக்க வேண்டும். ஒரு நாள் வைத்த அதே பொருள் அடுத்த நாள் கூடாது. இப்படி தொடர்ந்து பூஜித்தால், அம்பிகை மனம் இரங்குவாள். நீ வேண்டுவதெல்லாம் கிடைக்கும் என்று கூறியதை கோவிலில்
அப்படியே செய்தான் கலிங்க தேசத்தை சேர்ந்த அந்த அரசன்.ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, ஐந்து ஆண்டுகள் பொறுமையாக வழிப்பட்டான். அதற்கு அடுத்த நாள் பூஜைக்கான நேரம் நெருங்கியது. அவசர அவசரமாக ஓடி வந்தார் மந்திரி. மன்னா, நேற்று வரை விதவிதமான பொருட்களை காணிக்கையாக வைத்து விட்டோம். ஆனால் இன்று எதை வைத்து பூஜை செய்வது என்றே தெரியவில்லை. எல்லாம் முன்பு வைத்த பொருட்களாகவே இருக்கின்றன. பதட்டாமாக அவர் சொன்னது அரண்மனை முழுக்க எதிரொலித்தது. அச்செய்தி நகரம், நாடு என பரவி எல்லோரையும் தொற்றிக்கொண்டது. என்ன செய்ய போகிறார் மன்னர்? என்று எல்லோரும் பதைபதைத்தார்கள்.

ஏதாவது செய்யத் தவறினால் தெய்வ குற்றம் வந்துவிடுமே என்று தவித்தார் அரசர். அப்போது தான் அவர்கள் வந்தார்கள் மொத்தம் ஆயிரம்பேர். வந்தவர்களில் தலைவர் போலிருந்தவன் சொன்னான்.வேந்தே... கவலைப்பட வேண்டாம். நானும் எங்கள் இனத்தவருமாக மொத்தம் ஆயிரம்பேர் இதோ வந்திருக்கிறோம். எங்களையே காளி தேவிக்கு காணிக்கையாக அர்பணித்து பூஜைசெய்யுங்கள். சிலிர்த்துபோனான் அரசன். பரவச பட்டார்கள் ஊர்மக்கள். நாட்டுக்காக இப்படி ஓர் அர்ப்பணிப்பா. என  ஆச்சரியப்பட்டார்கள். பூஜையை ஆரம்பித்தான் மன்னன். ஆயிரம் பேரும் தயாராக வந்து அம்மன் முன் நின்றார்கள். அப்போது ஓர் அசரீரி எழுந்தது.

மன்னா. உன் வேண்டுதலை ஏற்றேன். உன் நாடு இனி எந்த பஞ்சமும் இல்லாமல் செழித்து விளங்கும். எனக்கு மனப்பூர்வமாக தங்களை அர்ப்பணிக்க வந்தவர்களை நான் என் மக்களாகவே கருதுகிறேன். நீ பூஜிக்கும் என் திருவடிவை, உன்இறுதிகாலத்தில் ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிடு. அசரீரியாக எழுந்தது. அம்மன் வாக்குதான் என்பது எல்லோருக்குமே புரிந்தது.

நாடு செழிப்பாகவே இருந்ததால் மன நிறைவோடு ஆட்சி செய்தான் மன்னன். தன் வாழ்நாள்  நிறைவடையும் காலத்தில் அம்மன் திருவடிவினை அழகான பேழையில் வைத்து ஆற்றில் விட்டான். அம்மனை சுமந்து கொண்டு தொட்டில் போல் அசைந்து ஆடியபடியே ஆற்றில் மிதந்தது பெட்டி உள்ளே ஆனந்தமாக உறங்கியபடி வந்த காளி ஓர் இடம் வந்ததும் விழித்தாள். தங்களையே காணிக்கையாக தர முன் வந்த மக்கள் அப்பகுதியில் தான் வசிக்கிறார்கள் என்பது அவளுக்கு தெரியாதா என்ன? அவள் விருப்பம் புரிந்தது போல் அங்கேயே நின்றது பெட்டி. அன்று தன் முன் வந்து நின்றவர்களின் தலைவர் போல் இருந்த பெரியவரின் கனவில் தோன்றினால் காளிதேவி. பெட்டிக்குள் தான் இருப்பதை சொன்னாள். அதன்பிறகு தூக்கமாவது ஓய்வாவது. ஓடினார்கள் எல்லோரும் உரிய மரியாதைகளோடு அம்பிகையை அழைத்து வந்தார்கள். ஆமாம். எடுத்து வந்ததாக சொல்வதைக்கூட விரும்பவில்லை அவர்கள். என் மக்கள் என்று சொன்ன தாயை, தங்கள் வீட்டு பெண்ணாகவே பாவித்து சகல சீர்களுடன் கூட்டிக்கொண்டு வந்தார்கள். கோயில் கட்டினார்கள். பெட்டியை வைத்து திறக்கபோனார்கள். இப்போதும் அசரீரி வாக்காக அம்மன் பேசினாள்.ஐந்து ஆண்டுகள் மன்னன் பூஜித்த பின் நீங்கள் என் முன் வந்ததால் அந்த நாளில் மட்டுமே இனி நான் வெளியில் வருவேன். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நான் காட்சியளித்தாலும் என் அருள் என்றென்றும் இங்கே நிலைத்திருக்கும். உங்கள் இனத்தவரே என்னை தொடர்ந்து பூஜிக்கட்டும். அதே சமயம் இங்கே வந்து என்னை யார் வழிப்படாலும் அவர்கள் வேண்டுவன யாவும் கிடைக்கும்.

அந்த நிகழ்வுக்கு பிறகு அன்று முதல் இன்றுவரை ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை திருப்பட்டினம் ஆயிரங்காளியம்மன் கோவிலில் பூசை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...