தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கரை ஒதுங்கிய கழிவு மீன்கள்

கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னை எண்ணூர் துறைமுகத்தின் அருகே இரு கப்பல்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான விஷயம் நாம் அனைவரும் அறிந்ததே.இந்த விபத்தில் மும்பையில் இருந்து எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் உடைந்து அதிலிருந்த பல்லாயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் ஒரு அடி ஆழத்திற்கு திட்டாக படர்ந்துள்ளதாகவும் அதனை பிரித்து எடுக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.அப்பொழுது தான் தமிழக அரசியலில் புதியதொரு பிரச்னை எழுந்தது அதன் பின் கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்த பிரச்சனை என்ன ஆனாது என்றே தெரியவில்லை.பின்னர் சில நாட்கள் கழித்து இந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்த விவகாரத்தால் கடல் மீன்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை எனவும் அதனை  சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை எனவும் அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.அந்த நேரத்தில் தான் முதல்வர் பன்னீர் செல்வம் அம்மாவின் சமாதி முன் உட்கார்ந்து தியானம் செய்ய தொடங்கினார்.அன்று முதல் இன்று வரை அந்த கச்சா கழிவுகள் குறித்து என்ன ஆனது என்றே தெரியவில்லை.

 இந்நிலையில் காரைக்கால் கடற்கரை பகுதிகளில் ஒரு நான்று நாட்களுக்கு முன்பில் இருந்து மீன்கள் செத்து ஒதுங்குவது வாடிக்கையாகி விட்டது.காரைக்கால் கடற்கரை பகுதிகளில் தற்பொழுது ஏராளமான கழிவு மீன்கள் ஒதுங்கி கிடக்கின்றன.இதனால் சுற்றுலா தளமான காரைக்கால் கடற்கரையில் சில கிலோமீட்டர் தூரத்திற்கு துர்நாற்றம் வீசி வருகிறது.காரைக்கால் மீன் பிடி துறைமுகத்தில் ஏராளாமான கழிவு மீன்கள் கொண்டுவரப்பட்டு அவை அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது ஒரு வேலை கப்பலில் இருந்த கழிவு மீன்கள் தான் தவறுதலாக கடலில் வீழ்ந்து கரை ஒதிங்கியிருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது ஆனாலும் காரைக்கால் நகர மக்களிடத்தில் சென்னை எண்ணூர் துறைமுகத்தில் கச்சா எண்ணெய் கழிவு கடலில் கலந்த பீதியும் அதிகரித்து வருகிறது.

கச்சா எண்னெய் கழிவுகள் குறித்து பீதியை ஏற்படுத்தக்கூடாது என்று கூறும் அரசாங்கத்திற்கு கழிவு மீன்கள் கடற்கரை ஓரங்களில் ஒதுங்கும் இந்த நிலைக்கு உண்மை காரணம் என்னவென்று மக்களுக்கு தெரியப்படுத்தும் கடமையும் உள்ளது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிவித்து கொள்கிறோம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...