தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் மீத்தேன் (ஹைட்ரொ கார்பன் ) திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்புகள்

நிலத்தின் அடியில் புதைந்திருக்கும் இயற்கை வாயுக்களை வெளியில் எடுத்து அவற்றை எரிபொருளுக்காகவும் இதர தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்த  மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட   புதிய திட்டம் தான் ஹைட்ரொ கார்பன் திட்டம் . இத்திட்டமானது தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காரைக்கால் மாவட்டத்திலும் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் நிறைவேற்றப்பட ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.இந்த திட்டம் அறிவிக்கப் பட்டதிலிருந்து  காரைக்கால் மாவட்டத்தில் அதற்கான எதிர்ப்புகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.தமிழகத்தில் நிலவிவரும்  இந்த பரபரப்பான அரசியல் சூழலிலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பாக சிலர் குரல் எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஹைட்ரொ கார்பன் திட்டத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு ? 
ஹைட்ரொ கார்பன் வாயுக்கள் என்றால் பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் ஹைட்ரஜன் (Hydrogen ) மற்றும் கார்பன் (carbon ) கலவையில் உருவான இயற்கை வாயுக்கள்.நிலத்திற்கு அடியில் அவைகளில் அதிகமாக புதையுண்டு இருப்பது மீத்தேன் வாயு தான் அதை தவிர பிற ஹைட்ரொ கார்பன் களும் நிலத்தின் அடியில் உண்டு ஆனால் இதற்கு முன்பே மீத்தேன் திட்டத்தை அறிவித்து மக்களின் தொடர் எதிர்ப்பால் அத்திட்டத்தை கை விடுவதாக அறிவித்துவிட்டு இப்பொழுது ஹைட்ரொ கார்பன் திட்டம் என்ற பெயரில் அதே மீத்தேன் திட்டத்தை அரசு கொண்டு வர முனைப்பு காட்டுவதாக மக்கள் எண்ணுகின்றனர்.

இயற்கை எரிவாயு கலவையின் கூறுகள் 

மீத்தேன் (மெத்தேன்)    ---------------------------> 70 - 90 %
எத்தேன்                              ---------------------------->  5 - 15 %
புரொப்பேன் மற்றும் பியூட்டேன்      5 % குறைவாகவும் மீதம் உள்ள கலவையில் கார்பன் மோனாக்சைடு, நைட்ரசன், ஹைட்ரஜன், கந்தகம் உள்ளிட்டவைகளும்  கலந்திருக்கும்.

ஹைட்ரொ கார்பன் இயற்க்கை வாயுக்களால் ஏற்படும் பாதிப்புகள் என்ன ?
இந்த இயற்கை எரிவாயுக்களுக்கு இயற்கையிலே நிறம் ,வடிவம் ,மணம் என்று எதுவும் கிடையாது இது காற்றிலோ நீரிலோ கலந்துவிட்டால் அவற்றை  எளிதில்  இனம் காண முடியாது .

மீத்தேன்  வாயுவை எடுக்க முயற்சிக்கும் பொழுது நச்சுத் தன்மை மிகுந்த வாயுக்கள் நிலத்தடி நீருடன் கலக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது இதனால் விவசாயிகளுக்கு மட்டுமின்றி அந்த நச்சு கலந்த நீரை பயன்படுத்தும் அனைவருக்கும் பாதிப்புகளை உண்டாக்குகிறது.

சமீபத்தில் சிரியா நாட்டில் மீத்தேன் வாயு திட்டத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் அடங்கிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டு அது வைரலாகி வருகிறது ஹைட்ரொ கார்பன் திட்டம் குறித்து மக்களுக்கு எழுந்த பயத்தை அது உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டை ஆட்சி செய்ய போகும் அரசை தேர்ந்தெடுக்க தான் மக்களின் கருத்தை யாரும் கேட்கவில்லை இதைப்போன்ற திட்டங்களை உறுதிப்படுத்தும் பொழுதாவது மக்களின் கருத்தை கேட்டிருக்கலாமே.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...