தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

28-02-2017 நாளை ராமேஸ்வரம் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு

28-02-2017 நாளை தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் 28-02-2017 நாளையும் வானம் அவ்வப்பொழுது மேகமூட்டத்துடன் காணப்படும்.

2017 மார்ச் மாதத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில்  நல்ல மழை பொழிவதற்கான  வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.தமிழகம் எங்கும் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் குறிப்பாக தென் தமிழகத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.தற்பொழுது இருக்கும் வானிலையே தொடருமானால் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 03-03-2017 அல்லது 04-03-2017 லில் மழை தொடங்கலாம்.அதன் பிறகு நாம் இதற்கு முந்தைய பதிவுகளில் கூறியது போன்று அடுத்த பத்து நாட்களுக்கு அவ்வப்பொழுது மழை பெய்யலாம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...