தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மார்ச் 2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கான வாய்ப்புகள்

26-02-2017 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியின்  தென் கடலோர பகுதிகளில் நிலவி வந்த குளிர் குறைய தொடங்கும்.இலங்கையில் நல்ல மழைக்கான வாய்ப்பு இருப்பதால் தென் கடலோர மாவட்டங்களில் இந்த மாத இறுதி நாட்களில் ஒரு சில இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.28-02-2017 கன்னியாகுமரி ,திருநெல்வேலி  மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் அதிலும் குறிப்பாக பாளையம்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

மார்ச் 2017 லில் இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருக்கிறது அவ்வாறு நடக்கும் பட்சத்தில் 03-03-2017க்கு பிறகு தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

காரைக்கால் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்னும் சில தினங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.27-02-2017 அல்லது 28-02-2017 வேதாரணியம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம். 27-02-2017க்கு  பிறகு காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் நிலவி வரும் குளிர் குறையும்  மார்ச் மாதம் முதல் வாரம் தொடங்கி அடுத்த சில நாட்களுக்கு மழை அவ்வப்பொழுது பொழிய வாய்ப்பு உள்ளது.ஆனால் மழையின் அளவை இப்பொழுது உறுதியாக கூறமுடியாது இன்னும் சில நாட்களில் மீண்டும் பதிவிடுகிறேன்.








பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...