தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பன்னீர் vs சசிகலா கல்லாகட்டும் ஊடகங்கள்

சசிகலா தமிழக முதல்வராக ஆவதற்கு பொது மக்களிடம் எதிர்ப்பு இருப்பது உண்மைதான் ஆனால் அதற்காக ஒட்டுமொத்த ஊடகங்களும் சசிகலாவை ஒரு தீவிரவாதி போலவும் பன்னீர்செல்வத்தை ஒரு கதாநாயகன் போலவும் செய்தி வெளியிட்டு வருவது ஒரு ஆரோக்கியமான விஷயமாக தோன்றவில்லை.

தொலைக்காட்சி ஊடங்கங்கள் அச்சம்பவம்  அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவத்தால் இங்கு பரபரப்பாக உள்ளது என்று செய்தி வெளியிட்டு தமிழகம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்த முயல்கின்றனவோ ? என்ற கேள்வி நடுநிலையாளர்களின் மனதில் எழுந்திருக்கிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.சாதாரண நாட்களில் மாவட்ட செய்திகள் உள்ளூர் செய்திகள் கொலை,கொள்ளை,சாதனைகள்  என தொடர்ந்து செய்திகளை வழங்கிவந்த தொலைக்காட்சி ஊடகங்கள் இந்த நான்று நாட்களில் கொலை கொள்ளை என மாநிலத்தில் நடந்த எந்த ஒரு விஷயத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க தவறிவிட்டது என்பதே உண்மை.

 இதையெல்லாம் பார்க்கும் பொழுது இவர்கள் மக்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்வது போன்று தோன்றவில்லை மாறாக எதிர்பார்ப்பு இதுவாக தான் இருக்க வேண்டும் என்ற ஒரு நிர்பந்தத்தை ஏற்படுத்த முயல்வது போல தான் தோன்றுகிறது.இதைப்போன்ற விவகாரங்களில் வியாபாரம் என்ற ஒன்றை மட்டும் மனதில் நிறுத்தி செயல்படாமல் கொஞ்சம் சமூக அக்கறையுடன் ஊடகங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...