தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டம்

நிறுத்தப்பட்ட மீத்தேன் திட்டத்தை ஹைட்ரொ கார்பன் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்து  விவசாய பகுதிகளான காரைக்கால் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நூதன முறையில் தொடங்க ஒப்புதல் வழங்கிய மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பாக போராட்டம் நடைபெற்றது.மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை எப்படியும் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது.இந்த நேரத்தில் காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்டத்துடிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகள் அனைத்துக்கும் எந்த ஒரு எதிர்ப்பும் மத்திய அரசு தெரிவிக்காமல் இருப்பது மேலும் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்கிறது "தண்ணீர் இருந்தால் தானே விவசாயம் செய்வ!  மீத்தேனுக்கு எதிர்ப்பு தெரிவிப்ப ! "  உனக்கு தண்ணீரும் கிடையாது தப்பிக்க வேறு வழியும் கிடையாது என்பது தான் மத்திய அரசின் என்னமோ என்று என்னத்த தோன்றுகிறது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

1 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...