தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஜனம் செய்த ஜனநாயக படுகொலை

இளைஞர்கள் ஒன்றுகூடி ஜல்லிக்கட்டு நடத்த விதித்த தடைக்கு எதிராக   போராட்டத்தை நடத்தி உங்கள்  இனத்திற்காக எப்படி போராட வேண்டும்  என்பதை தமிழர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்  என்று ஒட்டுமொத்த இந்தியாவும் கூறும் வகையில் ஆண்,பெண்,ஏழை,பணக்காரன், ஜாதி பாகுபாடுகள் போன்ற அத்தனை தடைகளையும் உடைத்து உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்கிய தமிழகத்தின் இன்றைய நிலை என்ன ?

ஜனநாயக நாட்டில் பத்தில் ஒரு பங்கு ஜனம் கூட விருபாத ஆட்சி  ஒன்று ஒரு மாநிலத்தில் நடைபெறுகிறது என்றால் அங்கு வசிக்கும் மக்களை ஜனம் என்பதா ஜடம் என்பதா ? சில தினங்களுக்கு முன் உலகம் போற்றிய நிலை மாறி இன்று தூற்றும் இந்த நிலைக்கு யார் காரணம் ? சாமானியனை பிரதிநிதியாக்கும் அதிகாரம் இங்கு சாமானியனுக்கே வழங்கப்பட்டு இருக்கிறது அப்படியானால் ஒரு நாட்டில் பிரதிநிதி திருடன் என்றால் சாமானியன் முட்டாள் தானே இன்னுமா புரியவில்லை வாக்குக்கு நாம் வாங்கிய பாவத்தின் பலனை தான் இன்று அனுபவிக்கிறோம்.

மொத்தத்தில் ஜனநாயகத்தை கொலை செய்தது பொது ஜனமாகிய நாம் தான் முதலில் மாறுவோம் பின்னர் மாற்றுவோம்.






பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...