தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஹைட்ரொ கார்பன் எதிர்ப்பு போராட்டங்கள்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் தமிழக பகுதியான புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசாலிலும் ஹைட்ரொ கார்பன் திட்டம் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்ததிலிருந்தே அதனை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.காரைக்காலில் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை நடைமுறை படுத்த முடியாது அத்திட்டத்தை புதுச்சேரி அரசு ஏற்காது என புதுவை முதல்வர் நாராயணசாமி நேரடியாகவே குறிவிட்ட நிலையில் தமிழக அரசு ஏனோ இந்த விஷயத்தில் மௌனம் காக்கிறது.மௌனமாக இருப்பது மட்டும் மின்றி நாகையில் இன்று ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு நாகையில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரி அரசு ஹைட்ரொ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பான ஒரு நிலைப்பாட்டை கொண்டு இருந்தாலும்.ஹைட்ரொ கார்பன் விவகாரத்தில் மத்திய அரசின் இந்த ஒரு தலைப்பட்சமாக போக்கை கண்டித்து காரைக்காலில் பல்வேறு தரப்பினரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருக்கின்றனர்.தற்பொழுது இளைஞர்கள் யாவரும் நெடுவாசலுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் மார்ச் 1 முதல் ஹைட்ரொ கார்பன் திட்டத்தை எதிர்த்து காரைக்காலில் போராட்டங்கள் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்ப படுகிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...