தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தமிழக மக்கள் ஜனநாயக விரோத அதிமுக அரசை தூக்கி எறிவார்கள் - முதல்வர் நாராயணசாமி

22-02-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது நடத்தப்பட்ட ஜனநாயக அத்துமீறல்களை எதிர்த்தும் திமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரியில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நேரில் சென்று வாழ்த்தி பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தமிழக சட்டப்பேரவையில் அதிமுக நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது நடைபெற்ற சம்பவங்கள் ஜனநாயக படுகொலையாகும் திமுக காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு கேட்டும் அதை சபா நாயகர் நிராகரித்துள்ளார்.சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு கேட்டால் அதை ஏற்க வேண்டும் என்று விதிகள்  உள்ளது எதிர்க்கட்சிகள் அனைத்தையும் வெளியே அனுப்பிவிட்டு அதிமுக வெற்றிபெற்றதாக அறிவித்த பேரவைத் தலைவரின்  முடிவை எதிர்த்த ஸ்டாலின் நீதீமன்றத்தில் தொடுத்த வழக்கு வெற்றிபெறும்.தருமம் தான் எப்பொழுதும் வெல்லும் என கூறினார்.

மேலும் இது குறித்து அவர் பேசுகையில் தமிழக மக்கள் ஜனநாயக விரோத முறையில் வந்த அதிமுக அரசை தூக்கி எறிவார்கள் என்றார்.

காரைக்காலில் உண்ணா விரத போராட்டம் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு எ.எம்.ஹச்.நாஜீம் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...