கடந்த 2016ஆம் ஆண்டு இறுதியில் பருவ மழை பொய்த்து போனதாலும் காரைக்காலுக்கு ஆறுகளின் மூலம் வர வேண்டிய போதுமான அளவு நீர் வராததாலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் கடுமையான வறட்சிக்கு உள்ளானது.இதனையடுத்து வறட்சி நிவாரணம் கோரி மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு கடிதம் ஒன்றை அனுப்பியது.இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி வருகின்ற 05-03-2017 அன்று வறட்சி குறித்து ஆய்வு செய்ய மத்திய குழு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு வருவிருப்பதாகவும் மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக