தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் தொடரும் பன்றிக்காய்ச்சல் பீதி

நேற்று புதுச்சேரியில் 24 பேருக்கு பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும் அதில் இரண்டு நபர்களை இறந்து விட்டதாகவும் செய்தி வெளியாகியது இதனை அடுத்து 02-02-2017ஆன இன்று மேலும் 3 நபர்களுக்கு பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவதாக செய்தி வெளியாகிவருகிறது .இந்த தகவல் புதுச்சேரி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்பொழுது பன்றிக்காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்ட மூன்று நபர்களில் ஒருவர் மருத்துவராம் அவர்கள் மூவருக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் தனிவார்டில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.மேலும் இறந்த இரண்டு பேரை தவிர உள்ள 19 நபர்களும் சிகிச்சைக்கு பின்னர் குணமாய் வீடு திரும்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சளி,காய்ச்சல்,தொண்டை கரகரப்பு உள்ளவர்கள் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகி தங்களுக்கு பன்றிக்காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்ளுமாறு சுகாதாரத்துறை பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

பன்றிக்காய்ச்சல் நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள்

  • இருமல் 
  • காய்ச்சல் 
  • தொண்டை கரகரப்பு 
  • மூக்கு ஒழுவுதல் 
  • உடல் வலி 
  • தலைவலி 
  • குளிர் நடுக்கம் 
  • சோர்வு 
புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மேல் கூறிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில்  உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்து கொள்ளுங்கள்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...