தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சசிகலாவை மிரட்டுவது யார் ?

தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்தின் மெரினா பேட்டிக்கு பிறகு சசிகலாவுக்கு எதிராக வெளிப்படையாக குரல் குடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இந்த பிரச்சனையை ஒரு பரிமாணத்தில் இருந்து மட்டும் விமர்சனம் செய்யாமல் சசிகலாவின் திசையில் இருந்து அவர் தற்பொழுது சந்தித்துவரும் பிரச்சனைகளையும் பதிவு செய்து  மக்களுக்கு கொடுப்பது ஒரு ஊடகத்தின் கடமை என்பது தான் உண்மை .அந்த வகையில் சசிகலாவை பொறுத்தவரையில் இது அவரின் வாழ்நாளில்  மிகவும் கஷ்டமான காலம் என்றே சொல்லலாம்.இந்த கஷ்டமான காலத்தில்  அவரின் கடந்தகாலத்தை எண்ணிப்பார்ப்பாரா என்று தெரியவில்லை அப்படி அவர் எண்ணிப்பார்ப்பாரே யானால் அவரால் கண்ணீர் சிந்திய மக்களின் வலி அவருக்கு இன்று புரிந்திருக்கும்.

சசிகலா சந்தித்து வரும் பிரச்சனைகள்

அவர் பதுக்கி வைத்த அத்தனை சட்டமன்ற உறுப்பினர்களை  திருப்தி படுத்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது அவர்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது வாக்களித்த நமக்கு அவர்களை பற்றி தெரியாதா என்ன ? ஜெயலலிதாவிடம் இருந்த பயம் அவர்களுக்கு தற்பொழுது சசிகலாவிடம் கிடையாது.இன்று சசிகலா அவர்களை நம்பித்தான்  என்கின்ற நிலையில் இருக்கிறார் அதனால் ஆதரவு வழங்க அனைவருமே பதவி கேட்பார்கள் 129 மந்திரி பதவிகளுக்கு அவர் தான் எங்கே போவார் பாவம்.இது தான்  சாக்கு என்று பதவி தரியா ? இல்ல பன்னீரு பக்கம் போவா ? என மிரட்டவும் செய்வார்கள் .இது ஒரு பக்கம் இருக்க உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வரும் என்று ஒருவராலும் உறுதியாக கூற முடியவில்லை.கட்சியின் கீழ் மட்டத்திலும் சரி பொதுமக்களிடமும் சரி அவருக்கு ஆதரவு இருக்கிறது என்று அடித்து சொல்லும்படியான நிகழ்வு எதுவுமே இல்லை.நான் முன்பே கூறியது போன்று அவரை இதுநாள் வரையில் வெளிப்படையாக எதிர்க்க அஞ்சியவர்கள் எல்லாம் இன்று அவர்மீது  நேரடியாகவே குற்றம் சொல்ல தயாராகிவிட்டனர் இனி வரக்கூடிய  காலங்களில் ஒரு உயரிய பதவியை எட்ட முடியவில்லை என்றால் இனி வாழ்நாள் முழுவதும் அவருக்கு எதிர்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கும் இதை யாராலும் மாற்ற முடியாது.ஆக மொத்தத்தில் சசிகலாவின் பார்வையில் இந்த  நிலையை  'இது ஒரு வாழ்வா சாவா  போராட்டம் ' என்றே விவரிக்கலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...