தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

மீண்டும் வெடித்தது மாணவர் போராட்டம்

 தமிழகத்தில் அரங்கேறிக்கொண்டு இருக்கும் அரசியல் குழப்பங்கள்  பதவி பேரங்கள் போன்ற அணைத்து கேவலமான விஷயங்களும் முடிந்து ஒரு நிலையான ஆட்சி வருவதற்குள் கர்நாடகா காரன் மேகதாது அணையை கட்டி  முடித்துவிடுவான் அதுமட்டுமா புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஹைட்ரொ கார்பன் திட்டம் என்ற பெயரில் நிறுத்திவைக்கப்பட்ட மீத்தேன் திட்டத்தை மறைமுகமாக தொடங்கிவிடுவான் பிறகு தென்னகத்தின் நெல் களஞ்சியமாக விளங்கிய காவிரி டெல்டா மாவட்டங்கள் ஒரு புல் பூண்டு கூட முளைக்க மறுக்கும் பாலைவனமாக மாறிவிடும்.நாசமான நாட்டை எவன் ஆண்டால்  என்னடா ....... என்ற எண்ணம் தான் இன்றைய இளைஞர்கள் மத்தியில் நிலவிவருகிறது.இதற்கு உதாரணம் தான் தஞ்சைக்கு அருகே அரேங்கேறிக்கொண்டு இருக்கும் மாணவர் போராட்டம்.

தமிழகத்துக்கு காவிரியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட தரமாட்டோம் என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்  கர்நாடக மாநில தலைமை செயலாளர் சுபாஷ் சந்திரா இதற்கு தமிழகம் சார்பாக பதில் கூற கூட ஒரு அரசியல் தலைவரும் முன் வரவில்லை.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தஞ்சைக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் அவர்களையும் அந்த போராட்டத்தையும் மக்களிடம் கொண்டுசேர்க்க எந்த தொலைக்காட்சி ஊடகங்களும் இதுவரையில் முன்வரவில்லை.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...