தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

திருநள்ளாறு காய்கனி வாரச்சந்தை வியாழக்கிழமைகளில் நடைபெறும்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் நகராட்சி திடலில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது.அந்த சந்தையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு ,நிரவி ,திருமலைராயன் பட்டினம், அமபாகரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டமல்லாமல் சீர்காழி ,மயிலாடுதுறை,கும்பகோணம் ,திருச்சி,தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகபட்டினத்தை சுற்றியுள்ள தமிழக பகுதிகளில் இருந்தும்  கூட வியாபாரிகள் வந்து காரைக்கால் வாரச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் சமீபகாலமாக திருநள்ளாறு பகுதியில் தனி வாரச் சந்தை அமைக்க வேண்டும் என்று அங்கு இருக்கும் வியாபாரிகள் தெரிவித்து வந்தனர் இது தொடர்பாக வேளாண் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் அவர்களுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது.அந்த கோரிக்கையை ஏற்று நேற்று பயன்பாடுகள் இன்றி இருக்கும் திருநள்ளாறு பேருந்து நிலைய வளாகத்தில் வாரச் சந்தை நடைபெற்றது அதனை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இனி வரக்கூடிய நாட்களில் ஒவ்வொரு வாரமும் வியாழக் கிழமைகளில் திருநள்ளாற்றில் வாரச் சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...