தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காதலர் தினத்தில் காதலும் புரட்சியும்

இன்று வேலன்டைன் நாள் விழா உலகெங்கிலும் பல நாடுகளில் கொண்டாடப்பட உள்ளது இது ஐரோப்பிய நாட்டு கொண்டாட்டங்களில் ஒன்று என்றே சொல்லலாம்.ஐரோப்பியாவில் சில இடங்களில் இது பிப்ரவரி 14 லிலும் சில இடங்களில் ஜூன் 6 மற்றும் 30ஆம் நாளிலும்  வேலன்டைன் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் இது காதலர் தினம் என்று ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது வருடத்தின் 365 நாளில் ஒரு நாள் தான் காதலர் தினம் என்று கொண்டாடப்படுகிறது ஆனால் அதற்கு அவ்வளவு எதிர்ப்புக்குகள்.எதிர்ப்பவர்களை மட்டுமே குறை சொல்லிவிட முடியாது காதலர் தினக் கொண்டாட்டம் என்கிற பெயரில் சிலர் செய்யும் விபரீத சேட்டைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.சரி இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த காதலர் தினம் வேலன்டைன் என்பவரின் நினைவாக கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்கே தெறித்து இருக்கும் ஆனால் ஏன் கொண்டாடப் படுகிறது இன்று உலகம் முழுவதும் அத்தினத்தை  கொண்டாடுவதற்கு காரணம் என்ன ? அவர் காதலர்களை சேர்த்து வைத்தார் என்ற ஒரு சாதாரண விஷயம் மட்டும் அதற்கு காரணமாக இருக்க முடியாது காதலர் தினத்தை கொண்டாடுவோர் ஏன் வேலன்டைன் நாளை கொடடுகிறோம் என்று தெரிந்து கொண்டு கொண்டாடினால் தான் அவர்களுக்கு காதலின் பெருமையும்  சுதந்திரத்தின் அருமையும் விளங்கும்.

வேலன்டைன் நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது ?

அக்காலத்தில் ரோம் சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய போர் படையின் கடைநிலை போர் வீரர்களுக்கு  திருமணம் செய்து கொண்டு மனைவி குழந்தைகள் என்று வாழ தடை இருந்ததாம்.அவர்கள் வாழும் வரை நாட்டுக்காகவும் அரசருக்காகவும் வாழ வேண்டுமாம்.சரி அப்படி யாருக்கும் குழந்தைகள் இல்லாத பட்சத்தில் அடுத்த தலைமுறையில் யார் கடைநிலை போர் வீரர்களாக இருப்பார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கை தான் ஆனால் நீங்கள் நினைப்பது போல அவர்கள் ரோமர்கள் கிடையாது கடைநிலை போர் வீரர்கள் என்றால் அவர்கள் போரின் பொழுது சிறைபிடிக்கப்பட்ட எதிரி நாட்டின் அடிமைகள் அவர்கள் உயிர் வாழ வாழும் வரை ரோமர்களுக்கு ஆதரவாக சண்டையிட வேண்டும் அல்லது இயந்திரங்கள் போல உழைக்க வேண்டும் அதுவுமில்லையா அதிகாரம் படைத்தவர்களின் காலடியில் இறுதிவரை ஒரு ஐந்தறிவு கொண்ட மிருகம் போல கிடக்க வேண்டும்.அதே சமயம் அடுத்த தலைமுறையில் ரோமர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மன்னனும் மந்திரிகளும் சில  மனைவிகள்  பல உறவுகள் என வாழ்வார்கள்  உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.அந்த பல உறவுகளில் எதிரி நாட்டு அடிமை பெண்களும் இடமிருக்கும் ஆளும் வர்க்கம் அல்லவா அவர்களை எதிர்த்து பேச யாரும் கிடையாது.

இப்போதே  உங்களுக்கே புரிந்து இருக்கும் வேலன்டைன் செய்தது எவ்வளவு பெரிய புரட்சி என்று அரசருக்காக வாழ்ந்தவர்கள் தான் அடிமைகள் அவர்கள் மனைவி குழந்தைகள் என ஒரு குடும்பத்துக்காக வாழ ஆரம்பித்து விட்டால் அடிமை இனமே ரோமில் இருக்காது அதனால் தான் வேலன்டைனுக்கு கடுமையான தண்டனை அக்காலத்தில் வழங்கப்பட்டது.

பிற்காலத்தில் அதிகார வர்கத்தால் காதலர் தினக் கொண்டாட்டங்களில் வேலன்டைனின்  புரட்சி மறைக்கப்பட்டு சாதாரணமாக காதலர்களை சேர்த்து வைத்தார் என்கின்ற ஒரு நிகழ்ச்சி முன்னிலை படுத்தப்பட்டது.அதனால் தான் இன்று இதற்கு எதிர்ப்புகள்.

காதலர்கள் தங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை :

இன்று நாம் நமக்கு பிடித்த ஒருவரை சுதந்திரமாக காதல் செய்ய முடிகிறது என்றால் அந்த சுதந்திரத்தை நமக்கு வழங்கிய இந்த சமூகத்துக்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.இந்த சமூகத்தில் குழந்தைக்கு ஒரு பார்வை இளைஞருக்கு ஒரு பார்வை என்று தனித்தனியே கிடையாது நாகரீகம் என்ற பெயரில் பொது இடங்களில் சில்மிஷங்கள் செய்வதை நிறுத்திக்கொள்வது நல்லது.

காதல் என்பதும் ஒரு வகையான தனி மனித புரட்சி தான் எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன் என்பது தான் அதற்கு பொருள்.

 வருடத்தின் 365 நாளும் உங்கள் அன்புக்குரியவர்களை  காதலியுங்கள் காதலர் தினத்தன்று தவறாமல் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...